Cash Storage At Home: இந்தியாவில் இந்த ஆண்டு மக்களை தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.  மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று ஜூன் மாதம் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.  இதன்படி, பொது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சில கட்டாய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, பொது மக்கள் தங்கள் கையில் கணக்கில் இல்லாத பணத்தை கொண்டு செல்ல முடியாது.  அப்படி கொண்டு சென்றால் பறக்கும் படையினர் அதனை கொண்டு செல்ல அனுமதி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வீடு வாங்கும் கனவை சுலபமாக நனவாக்க சூப்பர் வழி! கூட்டு வீட்டுக் கடன் கொடுக்கும் நன்மைகள்!


மேலும், இந்தியாவில் உள்ள மக்கள் பொதுவாகவே வீட்டில் எவ்வளவு பணத்தை ரொக்கமாக வைத்திருக்க முடியும் என்பதற்கான விதிகளும் உள்ளன.  இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஆனாலும் பலர் இன்னும் பணத்தை வீட்டில் வைத்திருக்கும் முறைகளை நம்பி உள்ளனர். ஒரு குடிமகன் அவரது வீட்டில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு வரம்புகளும் இல்லை.  இதற்காக வருமான வரிச் சட்டம் வீட்டில் எவ்வளவு பணம் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்று வரம்பு விதிக்கவில்லை. ஆனாலும் அந்த பணத்திற்கான தகுந்த ஆதாரங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.  வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினால், அந்த பணத்தின் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். 


வருமானத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் வீட்டில் இருந்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நபருக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது கைது நடவடிக்கை எடுக்கலாம். வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட மொத்தப் பணத்தில் 137 சதவீதம் வரை அபராதம் விதிக்க வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.  இவ்வாறு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சில பொதுவான விதிகளை தெரிந்து கொள்வது நல்லது. எந்த ஒரு நபரும் 20,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பண பரிமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும். அதே போல எந்தவொரு நிதியாண்டிலும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனைகள் செய்ய கூடாது. இதற்கும் வருமானவரித்துறை அபராதம் விதிக்கலாம்.


அதே போல, வங்கியில் ஒரே நேரத்தில் ரூ.50,000-க்கு மேல் பணமாக டெபாசிட் செய்யும்போது அல்லது எடுக்கும் போது பான் எண்கள் தொடர்புடைய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.  இதனை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கட்டாயப்படுத்துகிறது. அதே போல வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தால் அவர்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் எந்தவொரு இந்திய குடிமகனும் 30 லட்சத்துக்கும் மேல் ஒரு சொத்தை ரொக்க பணமாக விற்பது அல்லது வாங்குவது விசாரணை அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். கூடுதலாக, வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே பரிவர்த்தனையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது.  கூடுதலாக, ஒரே நாளில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக அல்லது பரிசாக பெற முடியாது. 


மேலும் படிக்க | LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ