முதலமைச்சர் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின்படி நல்ல ஊதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமின்றி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும்.  அதோடு தற்போது பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூ.33,600 உயர்த்தப்படுவதோடு, 1020 பணியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  மேற்கூறப்பட்ட அனைத்தையும் அரசு அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்த போவதாக கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த காரணங்களால் உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் 


இந்த விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீர போகிறது.  அதுமட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  இதன் மூலம் அரசு கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது.  



இதுகுறித்து அரசு தரப்பில் கூறும்போது, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு ஊதிய விகிதத்தில் திருத்தும் செய்யப்பட்டு, அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்.  இந்த திருத்தத்தின் மூலம் அவர்களின் சம்பளம் ரூ.20,000 லிருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மாதம் ரூ.33,600 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அறிவிப்பு வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள் யுஜிசி மூலம் அங்கீகரிக்கப்படாத கூடுதல் ஆசிரியர்கள் புதிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் கிடையாது.  70 வயது வரை உள்ள ஊழியர்களும் விசிட்டிங் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள், அவர்களுக்கு மாதம் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Savings Tips: மாத சம்பளத்தில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்; செய்ய வேண்டியது இதுதான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ