FestiveShoppingRewards: கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட சலுகைகளை பரோடா வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக்காலமன தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள், BoB கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்று பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா, நேற்று (அக்டோபர் 18 புதன்கிழமை) அதன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்காக வரையறுக்கப்பட்ட, திருவிழாக் காலத்தை மையமாகக் கொண்ட FestiveShoppingRewards திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள், BoB கிரெடிட் கார்டுகளின் அனைத்து வகைகளையும் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது ஜாக்பாட்டாக இருக்கும்.


பாங்க் ஆஃப் பரோடாவின் பண்டிகைக்கால சலுகைகள்


அமேசான் (Amazon), பிளிப்கார்ட், Paytm மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளுடன் கூட்டாண்மை மூலம் மின்னணு, ஃபேஷன், பயணம், ஆன்லைன் ஷாப்பிங், மளிகை, வீட்டு அலங்காரம், தளபாடங்கள் மற்றும் ரீசார்ஜ்கள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு செலவிடும்போது வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சிறப்புச் சலுகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலன்களை ஆன்லைன் மற்றும் இன்-ஸ்டோர் என எப்படி வாங்கினாலும் பெறலாம். 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான செம ஜாக்பாட்.. டபுள் வருமானம் கிடைக்கும்


இந்த முயற்சியானது "BoB கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பண்டிகைக் கால ஷாப்பிங்கை அதிக பட்ஜெட்டுக்கு ஏற்றதாக மாற்றுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பண்டிகை கால அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று பாங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
 
திட்டத்தின் கீழ் பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு டீல்களை எவ்வாறு பெறுவது என்ற கேள்வி எழுகிறதா?  BoB RuPay கிரெடிட் கார்டை வைத்திருந்தால், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கு 50 நாட்கள் வரை வட்டியில்லாமல் கடன் கிடைக்கும்.  'ரொக்கமில்லா' பேமெண்ட்டுகளின் வசதியை அனுபவிக்க, எந்த UPI ஆப்ஸுடனும் இணைக்கும் விருப்பமும் உண்டு.  


மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு


Amazon.in இல் சிறந்த சலுகைகள், அட்டகாசமான சேமிப்பு என கவர்ச்சிகரமான திட்டங்களுடன் 5,000 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2023இல் இந்த பண்டிகைக் காலத்தை குதூகலமாக்கிவிட்டது என்றால், பிளிப்கார்ட் விற்பனையும் சக்கைபோடு போடுகிறது. Paytm, Xiaomi போன்ற பிராண்டுகளின் விற்பனை பண்டிகைக் காலத்தில் எப்போதும் அதிகமாக இருக்கும்.


ஸ்மார்ட்போன்கள், ஃபேஷன் மற்றும் அழகு, வீடு மற்றும் சமையலறை, உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் என புதிய பொருட்களை வாங்கி மகிழ மக்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு இது. எனவே இந்த நிறுவனங்களுடனான பேங்க் ஆஃப் பரோடாவின் கூட்டாண்மையானது, வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக மலிவான விலையில் தேவைப்படும் பொருட்களை வழங்குகிறது.


மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ