7 கோடி PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: வட்டி விகிதம் குறித்த குஷியான அப்டேட்
EPFO Updte: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. இது இப்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
EPFO Updte: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். நாட்டில் உள்ள சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரிக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. இது இப்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
= EPFO ஆனது 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய வட்டி விகிதத்தை கடந்த ஆண்டு 8.15 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
- 2023-24 நிதியாண்டில், EPF உறுப்பினர்கள் 8.25 சதவீத வட்டியின் பலனைப் பெறுவார்கள் என்று சமூக ஊடக தளமான X இல் தகவல் அளித்து EPFO தெரிவித்துள்ளது.
- புதிய கட்டணங்கள் மே 2024 இல் அறிவிக்கப்பட்டன.
- அதிலிருந்து இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) வட்டி வரவுக்காக காத்திருக்கிறார்கள்.
EPFO தந்த தகவல்
சமூக ஊடக தளமான X இல் பதிவிட்ட EPFO, EPF உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுவதில்லை என்று கூறியது. பொதுவாக, வருடாந்திர வட்டி விகிதம், அந்த நிதியாண்டு முடிந்த பிறகு, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அறிவிக்கப்படும். எனவே EPF உறுப்பினர்களுக்கான 2023-24 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது 31-05-2024 அன்று EPFO ஆல் அறிவிக்கப்பட்டது.
இந்த திருத்தப்பட்ட விகிதங்களின் வட்டி ஏற்கனவே வெளியேறும் உறுப்பினர்களுக்கு அவர்களின் இறுதி PF தீர்வில் வழங்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட சமீபத்திய 8.25% ஆண்டு வட்டி விகிதத்தில் 23,04,516 க்ளெய்ம்களுக்கு தீர்வு காணப்பட்டு உறுப்பினர்களுக்கு ரூ.9260,40,35,488 தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
EPF Balance Check: இப்படி செக் செய்யலாம்
இபிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா? இபிஎஃப் இருப்பு (EPF Balance) எவ்வளவு உள்ளது?
= UMANG App: இதை உங்கள் மொபைல் மூலமாகவே, அதிகாரப்பூர்வ உமங் செயலிக்குச் சென்று, அதில் லாக் இன் செய்து, செக் செய்யலாம்.
- EPFO Websie: இபிஎஃப்ஓ இணையதளம் மூலமாகவும் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம். EPF இந்தியா இணையதளத்திற்குச் சென்று “For Employees” விருப்பத்திற்குச் செல்லவும். “Services” டேபின் கீழ், “Member Passbook” என்பதை கிளிக் செய்யவும். லாக் இன் செய்ய, உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தவும். பதிவு செய்த 6 மணி நேரத்திற்குள் உங்கள் பாஸ்புக்கை நீங்கள் காண முடியும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ