வாழ்க்கையில் பாடுபட்டு சேமித்த பணத்தை திட்டமிட்டு சேமித்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் நிம்மதியாக வாழலாம். அதிலும், இளம் வயது முதலே சேமிக்க தொடங்கினால், பணத்தை பனமடங்காக்குவது எளிது. அதிலும் பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து டெபாசிட் செய்ய பெரிய அளவில் வருமானத்தை எளிதாக பெறலாம்.
பணத்தை சேமிப்புக் கணக்கில் வைப்பதன் மூலம் பெரிய வட்டி எதுவும் கிடைக்காது. வங்கிகள் போடப்படும் ஆர்டி முதலீடுகளிலும் பெரிதாக வட்டி கிடைக்காது. ஆனால், பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் SIP முறையில் முதலீடு செய்தால், பணத்தை பன்மடங்காக்கலாம், ஆயிரங்களையும் கோடிகளாக்கலாம்.
SIP முதலீட்டில் கிடைக்கும் அபரிமிதமான வருமானம்
பரஸ்பர நிதிகளில் மாதத்திற்கு ரூ 10,000 SIP என்ற அளவில் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில், எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்வோம். பரஸ்ப்ர நிதியத்தில் குறைந்த பட்சம் 12 சதவிகிதம் கிடைக்கும். சில சிறத நிதியங்கள் 20% - 30% வரை கூட வழங்குகின்றன. மேலும் இதில் கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதால், பணத்தை பெருக்குவது எளிது.
பரஸ்பர நிதியத்தில் 10 ஆண்டுகள் முதலீட்டில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில், 10 ஆண்டுகளில் 12 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆண்டுதோறும், 12% வருமானத்தின் படி கணக்கிட்டால் 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.23,23,391 கிடைக்கும். அதேசமயம் 15% ஆண்டு வருமானத்தில் கணக்கிட்டால் மொத்தம் ரூ.27,86,573 கிடைக்கும். ஆனால் முதலீட்டு காலம் அதிகரிக்கும் போது, வருமானமும் ஆச்சரியமான அளவில் அதிகரிக்கும்.
பரஸ்பர நிதியத்தில் 20 ஆண்டுகள் முதலீட்டில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில் 20 ஆண்டுகளுக்கு மாதாந்திர SIP ரூ.10,000 என்ற அளவிற்கு செய்து வந்தால், 12% வருமானம் கிடைத்தாலே கோடீஸ்வரன் ஆகலாம். 20 ஆண்டுகளில், மொத்தம் ரூ.99,91,479 (சுமார் ரூ. 1 கோடி) பெறுவார். அதேசமயம் 15 சதவீத வருமானம் கிடைத்தால் ரூ.1,51,59,550 கிடைக்கும். 20 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 30 வயதில் முதலீட்டை தொடங்கினால், 50 வயதாகும் போது ஒன்றரை கோடி கையில் இருக்கும்.
மேலும் படிக்க | Mutual Fund: ரூ.10 லட்சம் முதலீடு... ரூ.7.26 கோடியாக பெருகியது எப்படி
பரஸ்பர நிதியத்தில் 30 ஆண்டுகள் முதலீட்டில் கிடைக்கும் வருமானம்
எஸ்ஐபி முதலீட்டில், 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரூ.10,000 மாதாந்திர SIP செய்தால், 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், மொத்தம் ரூ.3,52,99,138 (3.5 கோடிகள்) கிடைக்கும். 15 சதவீதம் என்ற விகிதத்தில், 30 ஆண்டுகளுக்கு ரூ.10,000 முதலீட்டில் மொத்தம் ரூ.7,00,98,206 (ரூ.7 கோடி) கிடைக்கும். அதாவது 60 வயதாகும் போது முதலீட்டாளரிடம் ரூ.7 கோடிக்கு மேல் இருக்கும்.
பரஸ்பர நிதியத்தில் 30 ஆண்டுகளில் 15 கோடி கார்ப்ஸை உருவாக்குவது எப்படி?
எஸ்ஐபி முதலீட்டில், 30 ஆண்டுகளில், ரூ.15 கோடி கார்ப்ஸை திரட்டவும் வாய்ப்புள்ளது. இதற்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பித்த நிலையில், முதலீட்டை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்தால், அவருக்கு 30 ஆண்டுகளில் மொத்தம் ரூ.15,02,22,698 (ரூ. 15 கோடிக்கு மேல்) கிடைக்கும். இது 15 சதவீத வருடாந்திர வருமானத்தின் படி கணக்கிடப்பட்டுள்ளது. சம்பாதிக்க தொடங்கும் போதே, அனைவரும் SIP பற்றி சிந்திக்க வேண்டும். சிறிய முதலீட்டில் கூட பெரிய அளவில் நிதி திரட்ட முடியும். சேமிப்பில் மன உறுதி மட்டுமே அவசியம்.
(குறிப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவும்)
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ