ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்) 95 ஓய்வூதியதாரர்கள் எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதித்துள்ளது.  அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.  இதுகுறித்து இபிஎஃப்ஓ ட்விட்டரில் பதிவிட்டுள்ளபடி, "இபிஎஸ் 95 ஓய்வூதியம் பெறுவோர் எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம், இது சமர்ப்பித்த நாளிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும்" என்று ட்வீட் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Home Loan-ஐ விரைவில் அடைக்க: ஃபிக்ஸ்ட் வட்டி விகிதம், ஃப்ளோடிங்க் விகிதம்? எது சிறந்தது?


வாழ்க்கை சான்றிதழ்கள் அல்லது ஜீவன் பிரமான் பத்ரா, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும்.  ஓய்வூதியம் பெறுபவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக அந்த ஆவணம் செயல்படுகிறது.  ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், பொது சேவை மையம் (சிஎஸ்சி), தபால் அலுவலகம், தபால்காரர், UMANG ஆப் மற்றும் அருகிலுள்ள இபிஎஃப்ஓ ​​அலுவலகம் ஆகியவற்றில் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.



ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க மேலும் சில ஆவணங்கள் தேவைப்படும். அவை பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியனவாகும்.  இதற்கிடையில், இபிஎஃப்ஓ ​​அதன் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் போர்ட்டலில் பல சேவைகளை வழங்குகிறது.  இது ஜீவன் பிரமன் விசாரணை, பிபிஓ எண், பிபிஓ விசாரணை/பணம் செலுத்துதல் மற்றும் ஓய்வூதிய நிலையை அறிவது போன்ற சேவைகளை வழங்குகிறது.


மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR