EPFO அளித்த மாஸ் GIS அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஏற்றம்
EPFO Update: குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது அவர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும்.
EPFO Update: மத்திய அரசின் கீழ் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஊழியர்களின் நலன்களுக்காக ஒரு முக்கியமான புதுப்பிப்பை அளித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மகத்தான லாபத்தைப் பெறவுள்ளனர். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO- கீழ் திறக்கப்பட்ட கணக்கில் மாதா மாதம் பணியாளர்களும் ஊழியர்களும் பங்களிக்கிறார்கள். இபிஎஃப்ஓ -இன் சமீபத்திய புதுப்பின் மூலம், இனி அதிகரித்த ஊதியம் ஊழியர்ககுக்கு கிடைக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் (Group Insurance Scheme) கீழ் வரி விலக்குகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்த பெரிய அப்டேட்
குழுக் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பித்த EPFO முக்கிய தகவல்களைத் தந்துள்ளது. இதன் படி, குழுக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான (Government Employees) குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் (GIS) கீழ் பிடிக்கப்படும் தொகை உடனடியாக நிறுத்தப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது. எனினும், EPFO இன் இந்த முடிவு அனைத்து அரசு ஊழியர்களையும் பாதிக்காது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இபிஎஃப்ஓ அளித்துள்ள புதுப்பிப்பின் படி, செப்டம்பர் 01, 2013 க்குப் பிறகு EPFO இல் இணைந்த ஊழியர்கள் இனி GIS இன் கீழ் வரமாட்டார்கள். மேலும் அவர்களின் சம்பளத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட பிடித்தங்கள் ஏதேநும் இருந்தால், அவை திருப்பித் தரப்படும்.
கணக்கில் அதிக சம்பளம் வரும்
குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். இந்த முடிவு எந்த ஊழியர்களுக்கு பொறுந்துமோ அந்த அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் இந்த சிறப்பு திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவால், ஜிஐஎஸ் பிடித்தம் நிறுத்தப்படும் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கலாம்.
அதாவது, குரூப் இன்ஷூரன்ஸின் கீழ் பிடித்தம் செய்வதை நிறுத்துவதன் மூலம் ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது அவர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும். GIS -க்கு நிதியளிப்பதற்காக, ஊழியர்களின் ஊதிய விகிதத்தின்படி ஒரு குறிப்பிட்ட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இருப்பினும், புதிய மாற்றங்களால், இந்தத் திட்டம் தற்போது சில ஊழியர்களுக்கு நிறுத்தப்படும். இதன் காரணமாக அவர்கள் அதிக நிகர சம்பளத்தைப் பெறுவார்கள்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு இலவச ஓய்வூதிய பலனையும் பெறுகிறார்கள். ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ