EPFO ​​Update: இபிஎஃப்ஓ சந்தாதாரர்களாக இருக்கும் அனைவரிடமும் பிஎப் கணக்கு இருக்கும். ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இது முக்கியமான செய்தியாக இருக்கும். 


நீங்கள் EPFO ​​சந்தாதாரராக இருந்தால், உங்களிடம் PF கணக்கு இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இது உங்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக இருக்கும். PF கணக்கை நிர்வகிக்கும் நிறுவனமான இபிஎஃப்ஓ (EPFO), உங்கள் பிஎஃப் கணக்கை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. சந்தாதாரர்களின் வட்டி பணம் மிக விரைவில் அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிஎஃப் தொகைக்கு 8.15 சதவீத வட்டிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி தொகை விரைவில் கணக்கில் வந்துவிடும்.


பிஎஃப் கணக்கில் (PF Account) பிஎஃப் உறுப்பினர்களால் டெபாசிட் செய்யப்படும் பணம் EPFO ​​மூலம் வேறு இடத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, அதிலிருந்து வரும் வருவாயில் ஒரு பகுதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி வடிவில் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த வட்டி பணம் பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதை பற்றி இங்கே காணலாம். 


பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் வட்டி பணம் வந்துவிட்டதா என்பதை பின்வரும் வழிகளில் தெரிந்துகொள்ளலாம்


EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 


EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பை செக் செய்யலாம். இதற்கு முதலில் உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு லாக்-இன் செய்ய வேண்டும். பின்னர் பாஸ்புக்கில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, கணக்கின் அனைத்து விவரங்களையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | மொராக்கோ ஜி20 கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்ததன் பின்னணி என்ன?


மொபைல் மெசேஜ் மூலம் (SMS) 


எஸ்எம்எஸ் மூலமாகவும் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருப்புத் தொகையை செக் செய்யலாம். இதற்கு நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து EPFO UAN LAN என்று எழுதி, UAN எண்ணை எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகு, உங்கள் கணக்கின் அனைத்து விவரங்களையும் பெறுவீர்கள்.


மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் செக் செய்யலாம் 


மிஸ்டு கால் மூலமாகவும் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இந்த எண்ணை அழைத்தவுடன் அழைப்பு துண்டிக்கப்படும். அதன் பிறகு, இருப்புத் தொகையின் அனைத்து விவரங்களும் உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும்.


உமங் போர்ட்டல் மூலம் இருப்பை செக் செய்யலாம் 


இது தவிர, உமங் செயலி வழங்கும் வசதிகளையும் பயன்படுத்தலாம். இந்த செயலி மூலம் உங்கள் PF கணக்கின் இருப்பை சரிபார்க்கலாம். இந்த செயலியை Google Play, App Store மற்றும் Windows Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


மேலும் படிக்க | Penalty: வங்கிகளே சட்டத்தை மதிக்கவில்லை என்றால்? RBI கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ