Dhyan Chand Khel Ratna Award 2024 Winners : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது.
Dhyan Chand Khel Ratna Award 2024 Winners : தேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்திருக்கிறது. தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளும், அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேல் ரத்னா விருதினை தமிழகத்தை சேர்ந்த இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெற இருக்கிறார். இவர் போல இன்னும் மூன்று விளையாட்டு வீரர்களும் இந்த விருதினை பெறுகின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்றாவர் மனு பாக்கர்
ஹரியானாவை சேர்ந்த இவருக்கு தற்போது 22 வயதாகிறது. இவர், 2024ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதினை பெற இருக்கிறார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர் குகேஷ்.
தமிழகத்தை சேர்ந்த குகேஷிற்கு, கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குகேஷை போலவே தமிழகத்தை சேர்ந்த இன்னும் மூன்று பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழ்ழங்கப்பட இருக்கிறது.
பாரா பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்திற்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.