EPFO Update: பணியளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கான (EPF Members) டெத் க்ளெய்ம், அதாவது உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், அவரது நாமினி பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான விதியை EPFO ​​மாற்றியுள்ளது. இந்த தகவலை EPFO ​​ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO புதிய விதி


இப்போது புதிய விதியின்படி, EPFO ​​உறுப்பினர் இறந்துவிட்டால், அவருடைய PF கணக்கு ஆதாருடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் PF கணக்குடன் கொடுக்கப்பட்ட தகவலுடன் பொருந்தவில்லை என்றாலோ, அந்த சூழ்நிலையிலும் கணக்கு வைத்திருந்தவரின் பிஎஃப் தொகை நாமினிக்கு செலுத்தப்படும். இந்த மாற்றத்திற்குப் பிறகு, டெத் க்ளெய்ம் செல்லிமெண்ட் (Death Claim Settlement) தீர்வு எளிதாகிவிட்டது.


EPF உறுப்பினர்கள் இறந்த பிறகு, பிராந்திய அதிகாரிகள் அவர்களின் ஆதார் விவரங்களை இணைப்பதிலும் சரிபார்ப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக EPFO கருதுகிறது. ஆகையால், இபிஎப் உறுப்பினரின் நாமினிக்கு (Nominee) பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு பணத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


மேலும் படிக்க | விதிகளை மாற்றிய RBI, வங்கிகளுக்கு செக்: இனி இதற்கு அபராதம் கிடையாது.. கஸ்டமர்ஸ் ஹேப்பி
 
EPFO விதிகளில் செய்த பெரிய மாற்றம்: இனி நாமினிக்கு எளிதாக பணம் கிடைக்கும்


ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருத்த முடியாது என்பதை EPFO ​​தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, பிசிக்கல் சரிபார்ப்பின் அடிப்படையில் நாமினிக்கு பணம் வழங்கப்படும். ஆனால், இதற்கு மண்டல அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.


பிராந்திய அலுவலரின் அனுமதிக்குப் பிறகு, பிஎஃப் தொகை நாமினிக்கு வழங்கப்படும். இது தவிர, இதில் ஏற்படக்கூடிய மோசடிகளையும் தடுக்க EPFO ​​ஆல் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது குடும்ப உறுப்பினரின் நம்பகத்தன்மையும் முழுமையாக ஆராயப்படும்.


இந்த சரிபார்ப்புகளுக்கு பிறகு நாமினிக்கு பிஎஃப் பணம் வழங்கப்படும். PF கணக்கு வைத்திருந்தவர் ஆதாரில் கொடுத்த தகவல்கள் தவறாக இருந்தாலும் இது பொருந்தும். EPFO UAN உடன் உள்ள உறுப்பினரின் தகவல் தவறாக இருந்தால், பணத்தை செலுத்த மற்றொரு நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. EPFO விதிகளில் செய்துள்ள இந்த மாற்றம் பிஎஃப் உறிப்பினர்களுகு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)


நாட்டில் சம்பள வர்க்கத்தினர் அனைவருக்கும் இபிஎஃப் கணக்கு உள்ளது. இந்த கணக்குகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனங்களும் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். பணி ஓய்வுக்கு பிறகு பிஎஃப் நிதி ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றது. இது தவிர ஓய்வுக்கு முன்னரும் சில அவசரகாலங்களில் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ