EPFO Claim Settlement: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அப்டேட் உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்திய மாதங்களில் க்ளெய்ம் செட்டில்மென்ட் ஆகும் வேகத்தை கணிசமாக, 30% மேம்படுத்தியுள்ளது. இபிஎஃப் செயல்முறைகளில் பெரிய மென்பொருள் மேம்படுத்தல் நடந்துள்ளது. பல மாதங்களாக க்ளெய்ம் செட்டில் ஆகும் செயல்முறை மிக மெதுவாக உள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. நிதி நெருக்கடிகளின் போது உடனடியாக பணத்தை எடுக்க நினைக்கும் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இது இது பெரும் சிக்கலை தந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய மென்பொருள் மூலம் விரைவான செயலாக்கம்


ஆறு வாரங்களுக்கு முன்பு EPFO ​​ஒரு மென்பொருள் மேம்படுத்தலை நிறைவு செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக க்ளெய்ம்கள் பிராசஸ் செய்யப்படும் வேகம் அதிகரித்தது. சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, பீக் ஹவர்ஸின் போது செயல்படுத்தப்படும் க்ளெய்ம்களின் எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகியுள்ளது. EPFO அமைப்பு விரைவில் அதன் வன்பொருளையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது க்ளெய்ம் செட்டில்மெண்ட்களின் வேகத்தை மேலும் மேம்படுத்த உதவும்.


EPFO Claim


புதிய மென்பொருள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஒரு பகுதியாக இருக்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC)  உருவாக்கப்பட்டுள்ளது. இது EPFO ​​இன் டிஜிட்டல் தளத்தில் க்ளெய்ம்கள் காரணம் இல்லாமல் நிராகரிப்படுவதையும், தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய திபாவளி பரிசு: அகவிலைப்படி ஏற்றம், டிஏ அரியர், சம்பள உயர்வு


EPFO Claim Rejection: குறைந்த நிராகரிப்பு விகிதங்கள்


சமீபத்திய ஆண்டுகளில், கோரிக்கைகளின் நிராகரிப்பு விகிதத்தில், குறிப்பாக இறுதி PF க்ளெய்ம்களில், கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2017-18ல் 13% ஆக இருந்த நிராகரிப்புகள் 2022-23ல் கிட்டத்தட்ட 34% ஆக அதிகரித்தன. இதற்கு முக்கிய காரணம், EPFO ​​ஆல் சேமிக்கப்பட்ட தரவுகளுக்கும், க்ளெய்ம்களை கோருபவர்கள் வழங்கிய தகவளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள். மேலும்,  தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், மென்பொருள் மேம்படுத்தப்பட்டது முதல், க்ளெய்ம் நிராகரிப்பு (Claim Rejection) விகிதங்கள் குறைந்துவிட்டன. இதுமட்டுமல்லாமல், க்ளெய்ம் செயல்முறை இப்போது மிகவும் சுலபமாக உள்ளது.


புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம்


அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) பதிவுகளையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஒரு இபிஎஃப் உறுப்பினர் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், அவரது விவரங்கள் ஒரு மைய அமைப்பில் அணுகக்கூடியதாக இருப்பதை இது உறுதி செய்யும். இது இபிஎஃப்ஓ, நிறுவனங்கள், சந்தாதாரர்கள் என அனைவருக்கும் உதவியாக இருக்கும். புதிய கட்டண முறை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் EPFO சில விதிமுறைகளை தளர்த்தியது. இதன் மூலம் பிஎஃப் உறுப்பினர்களின் வசதி மேலும் அதிகரித்துள்ளது. சில தகுதியான க்ளெய்ம்களுக்கு காசோலைப் படம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கிக் கடவுச்சீட்டைப் பதிவேற்றுவதற்கான கட்டாயத் தேவையை EPFO தளர்த்தியுள்ளது. இது ஆன்லைன் க்ளெய்ம் செட்டில்மெண்டுகளை (Online Claim Settlement) விரைவுபடுத்துகிறது. இந்த மேம்பாடுகள் மூலம், இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருக்கும் EPF ​​சந்தாதாரர்கள் தங்கள் க்ளெய்ம்களை மிக எளிதாகவும் விரைவாகவும் பெற வழி கிடைத்துள்ளது. இது இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் செயல்பாடுகளில் சிறந்த அனுபவத்தை பெறுவது உறுதி செய்கிறது.


மேலும் படிக்க | அக்டோபர் 1, 2024, இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி... முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ