ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சில தாமதங்களுக்கு பிறகு 2021-2022ம் ஆண்டுக்கான வட்டிகளை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) வரவு வைக்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது.  கடந்த மாதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது செய்திருந்த ட்வீட்டில்  வட்டி விகிதம் விரைவில் ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.  அதன்படி தற்போது வட்டி தொகை வரவு வைக்கப்படும் செயல்முறை தொடங்கியுள்ளதால், உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க சில வழிகள் உள்ளது, அதனை பின்பற்றி நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.  பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்தாலோ அல்லது உங்களின் 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணை (யூஏஎன்) செயல்படுத்தியிருந்தாலோ உங்கள் பாஸ்புக்கைச் சரிபார்ப்பது எளிது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஃப்ரிட்ஜில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!


1) இபிஎஃப்ஓ​​-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in. என்கிற பக்கத்திற்கு செல்லவும்.


2) டாஷ்போர்டின் மேல் பகுதியில் இருக்கும்  'சர்வீசஸ்' என்பதை கிளிக் செய்து, இந்தப் பிரிவின் கீழ் 'ஃபார் எம்பிளாய்ஸ்' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.


3) இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் 'சர்வீசஸ்' என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 'மெம்பர் பாஸ்புக்' என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.


4) உங்கள் யூஏஎன் விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைந்து, சரியான கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.


5)  உள்நுழைந்த பிறகு, போர்டல் உங்களை இபிஎஃப் கணக்கிற்கு அழைத்துச் செல்லும்.  இங்கே, ஊழியர்கள் மற்றும் முதலாளிகளின் பங்களிப்புகளின் விவரங்கள் மற்றும் வட்டியையும் பார்ப்பீர்கள்.


நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து இருந்தால், வெவ்வேறு ஐடிகளுடன் பாஸ்புக்கில் உங்கள் இருப்பைச் சரிபார்க்க வேண்டும், உங்களின் சம்பளச் சீட்டுகளில் உங்கள் இபிஎஃப்ஓ ​​ஐடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  எஸ்எம்எஸ் அல்லது மிஸ்ட்டு கால் உங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம்.  அதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN ENG' என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இருப்பை சரிபார்க்கலாம் அல்லது 011-22901406 அல்லது 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும் உங்கள் இருப்பை சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | PM KISAN திட்டத்தில் ரூ.2000 வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ