EPFO Diwali Gift: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. EPFO அதன் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசை அளிக்கவுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மேம்படுத்த அரசு பல பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பல வித மாற்றங்களைச் செய்ய அரசு தயாராகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1000-ல் இருந்து அதிகரிப்பது, ஓய்வுபெறும் போது பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிப்பது, மாதத்திற்கு ரூ.15000க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்துவது ஆகியவை இந்த மாற்றங்களின் அடங்கும். இதற்காக செப்டம்பர் மாதத்திலேயே ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்களுக்கான உத்தரவுகளையும் அரசு வழங்கியது.


ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்கள்


இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக (EPF Subscribers) பல முக்கிய மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரசு இந்த மாற்றங்களை செய்வதில் தீவிரமாக உள்ளதாகவும், தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே IT உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் EPFO செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு இன்னும் எளிதாகவும், துரிதமாகவும் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் EPFO இடம் புகார்களின் நீண்ட பட்டியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றை பெரும்பாலும் EPFO ​​ஊழியர்களால் உரிய நேரத்தில் தீர்க்க முடிவதில்லை என்றும் கூறப்படுகின்றது. ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியும்.


தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா


தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது அமைச்சகம் மற்றும் EPFO ​​அதிகாரிகளிடம், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கு புதிய வழிமுறைகள் மிகவும் நட்பாக அமையும்படியான வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது தவிர, தொழிலாளர் அமைச்சர், ஓய்வுபெறும் போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) எளிதாக பணம் எடுக்க முடிவதை உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார். இதன் மூலம் அவர்களது நிதித் திட்டமிடல் உறுதி செய்யப்பட்டு, உறுப்பினர்கள் தங்கள் வருடாந்திர ஓய்வூதியத் தொகையில் தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வதும் எளிதாக இருக்கும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு எப்போது வரும்? ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ


EPFO இன் தீபாவளி பரிசு


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தீபாவளி பரிசாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளின் பட்டியல் இதோ:


- Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. பல ஊழியர் ஓய்வூதியர் சங்கங்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளன. 


- Wage Ceiling Hike: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. செப்டம்பர் 1, 2014 முதல், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. 


- EPF Withdrawal: பல வித மாற்றங்களின் மூலம், NPS இன் கீழ் பணத்தை எடுப்பது போல, இபிஎஃப்ஓ -விலும் பணம் எடுக்கும் முறை மாற்றப்படலாம் என கூறப்படுகின்றது. 


சமீபத்தில் அரசு இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000 -இலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்தது. மேலும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள் அதற்கு முன்னரும் பணத்தை எடுக்கலாம். 


மேலும் படிக்க | EPF உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: விதிகளில் மாற்றம், அதிக ஓய்வூதியம் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ