பிஎஃப் லாக் இன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. அமைப்பு அதிக சேவைகளை வழங்க முயற்சித்து வருவதாகவும் இபிஎஃப்ஓ கூறுகிறது. மேலும் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊனமுற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் உள்ளன. இப்படிப்பட்ட பல வசதிகளை அளிக்கும் இபிஎஃப்ஓ அமைப்பு, இ-நாமினேஷன் செய்வது மிகவும் அவசியம் என்று இப்போது கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இ-நாமினேஷன் 


இ-நாமினேஷனை தாக்கல் செய்வது மிகவும் முக்கியம் என்று  இபிஎஃப்ஓ கூறுகிறது. துரதிஷ்டவசமாக, உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (EPS) மற்றும் காப்பீடு (EDLI) பலன்களை எளிதாகப் பெறுவதற்கு இ-நாமினேஷன் உதவுகிறது என்று இபிஎஃப்ஓ கூறுகிறது. நாமினிக்கு ஆன்லைன் க்ளைம் சமர்ப்பிக்கும் வசதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.


இ-நாமினேஷன் செய்வதற்கான செயல்முறை இதோ: 


-  இபிஎஃப்ஓ ​​​​இணையதளம் > சேவைகள் (சர்வீசஸ்) > பணியாளர்களுக்கு (ஃபார் எம்ப்ளாயீஸ்) > உறுப்பினர் UAN / ஆன்லைன் சேவை (மெம்பர் யுஏஎன் / ஆன்லன் சர்வீஸ்) என்பதைக் கிளிக் செய்யவும்.


- UAN மற்றும் கடவுச்சொல் மூலம் லாக் இன் செய்யவும். 


- மேனேஜ் டேப்பின் கீழ் 'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: இனி அவசர காலத்தில் இரு மடங்கு தொகையை எடுக்கலாம், வழிமுறை இதோ 


- Provide details என திரையில் தோன்றும். 'சேவ்' செய்து தொடரவும்.


- குடும்ப விவரங்களைப் புதுப்பிக்க, 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.


- 'குடும்ப விவரங்களைச் சேர்' என்பதைக் கிளிக் செய்யவும். ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம்.


- மொத்த பங்குகளின் தொகையை அறிவிக்க 'நாமினேஷன் விவரங்கள்' என்பதை கிளிக் செய்யவும். 'சேவ் இபிஎஃப் நாமினேஷன்' என்பதைக் கிளிக் செய்யவும்.


- பின்னர்  'E-sign to generator OTP'என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட 'OTP' ஐ சமப்மிட் செய்யவும். 


- இ-நாமினேஷன் EPFO ​​இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-நாமினேஷன் செய்த பிறகு, கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை.


மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: PF கணக்குதாரர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ