EPFO சூப்பர் செய்தி: இனி அவசர காலத்தில் இரு மடங்கு தொகையை எடுக்கலாம், வழிமுறை இதோ

EPFO Advance: முன்பு ஒருவர் பிஎஃப்- இலிருந்து பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 12:42 PM IST
  • பிஏஃப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் பிஎஃப் தொகை, ஒரு பயனுள்ள தொகையாக, ஆபத்து காலத்தில் கை கொடுக்கும் தொகையாக இருக்கிறது.
  • இப்போது பிஎஃப்-இல் இருந்து இரு மடங்கு தொகையை எடுக்கலாம்.
  • இங்கே படிப்படியான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்.
EPFO சூப்பர் செய்தி: இனி அவசர காலத்தில் இரு மடங்கு தொகையை எடுக்கலாம், வழிமுறை இதோ title=

இபிஎஃப்ஓ அட்வான்ஸ் வித்ட்ராயல்: பிஏஃப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் பிஎஃப் தொகை, ஒரு பயனுள்ள தொகையாக, ஆபத்து காலத்தில் கை கொடுக்கும் தொகையாக இருக்கிறது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் இந்த சிறிய தொகை எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டால், கை கொடுக்கும். பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் வசதியை அரசாங்கம் வழங்கியதிலிருந்து, பிஎஃப் சந்தாதாரர்கள் மிகவும் வசதியாக இதை செய்ய முடிகின்றது. முன்பு ஒருவர் பிஎஃப்- இலிருந்து பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும். இதுமட்டுமின்றி, நீங்கள் விரும்பினால், பிஎஃப்-ல் இருந்து இரட்டிப்புத் தொகையையும் எடுக்கலாம்.

பிஎஃப்-இல் இருந்து இரு மடங்கு தொகையை எடுக்கலாம்: 

கொரோனா நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து இரு மடங்கு தொகையை எடுக்கலாம் என்ற வசதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதாவது, முன்னர், இபிஎஃப்ஓ ​​ஊழியர்களுக்கு நான்-ரீஃபண்டபிள் அட்வான்ஸ் எடுப்பதற்கான அனுமதியை அளித்தது.  ஆனால் இப்போது இந்த வசதி இரண்டு மடங்கு தொகை எடுக்க அல்லது இரண்டு முறை முன்பணம் எடுக்க கிடைக்கிறது. அதாவது, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஊழியர் இந்த நிதியை இரண்டு முறை எடுக்கலாம். முன்பு இந்த வசதி ஒரு முறை மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ அவசரத்தின் (மெடிகல் எமர்ஜன்சி) கீழ் இந்த சிறப்பு வசதி அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எந்த ஊழியரும் நிதி ரீதியாக சிரமப்படக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும். ஊழியர்களின் சவுகரியத்துக்காகவே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன் செயல்முறையை இங்கு அறிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: PF கணக்குதாரர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்! 

இங்கே படிப்படியான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 1: இதற்கு, உறுப்பினர் இ-சேவை போர்டலான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குச் செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2: உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் கணக்கில் லாக் இன் செய்யவும்.

ஸ்டெப் 3: இப்போது ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று, உங்கள் கோரிக்கையைத் தேர்ந்தெடுக்கவும் (படிவம்-31, 19, 10C மற்றும் 10D).

ஸ்டெப் 4: பின்னர் உங்கள் திரையில் ஒரு புதிய வலைப்பக்கம் தோன்றும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

ஸ்டெப் 5: இப்போது இங்கே உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு 'சரிபார்' (verify) என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 6: உங்கள் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், அதில் 'உடன்படிக்கைச் சான்றிதழை' (சர்டிஃபிக்ட் ஆஃப் அண்டர்டேகுங்)-ஐ வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். 

ஸ்டெப் 7: டிராப் டவுன் மெனுவில், நீங்கள் 'பிஎஃப் அட்வான்ஸ் (படிவம் 31)' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 8: டிராப் டவுன் மெனுவிலிருந்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, தொற்றுநோய் (COVID-19)' என்பதை தேர்ந்தெடுத்து பணம் எடுக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். 

ஸ்டெப் 9: தேவையான தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி உங்கள் முகவரியை உள்ளிடவும்.

ஸ்டெப் 10: இப்போது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் (OTP) அனுப்பப்படும். அதை உள்ளிடவும்.

மேலும் படிக்க | அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்! முழு விவரம் இதோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News