வீட்டிலிருந்தபடியே எவ்வித சிரமமுமின்றி இப்போது ஆன்லைனிலேயே எல்லா விதமான தகவல்களையும் நம்மால் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள முடிகிறது.  அந்தவகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் பயனர்களுக்கு சிரமமில்லாமல் செய்யும் வகையில் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் செய்யும்படி மாற்றியுள்ளது.  இபிஎஃப்ஓ இவ்வாறு ஆன்லைன் சேவையை வழங்கியுள்ளதால் ஊழியர்களின் நேரமும் மிச்சமாகிறது.  இனிமேல் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தனது கணக்கில் உள்ள இருப்பு எவ்வளவு என்பதை அறிய எங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக தங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை நான்கு எளிய வழிமுறைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அவர்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்து அல்லது எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் தங்களது கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ள முடியும்,மேலும் UMANG செயலியின் மூலமும் சரிபார்க்கலாம்.  மிஸ்டு கால் மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் முதலில் இபிஎஃப்ஓவில் தனது மொபைல் நம்பரை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.  அப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும்.  நீங்கள் மிஸ்டு கால் கொடுத்த சில நிமிடங்களில் உங்கள் மொபைல் இருக்கு எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பது குறித்த விவரங்கள் அனுப்பப்படும்.  



மேலும் படிக்க | IRCTC: திருவிழாவுக்கு ஊருக்கு போக ஈஸியா ரயில் டிக்கெட் புக் செய்யலாம்


எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ளவும் உங்கள் மொபைல் நம்பரை இபிஎஃப்ஓவில் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும் அப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFO ​​UAN LAN என்று டைப் செய்து அனுப்பவேண்டும்.  ஆங்கிலத்தில் நீங்கள் செய்தியைப் பெற விரும்பினால், LAN க்கு பதிலாக ENG என்று எழுதவும், அதுவே ஹிந்தியில் செய்தியை பெற LAN க்கு பதிலாக HIN என்று டைப் செய்ய வேண்டும்.  நீங்கள் எஸ்எம்எஸ் செய்த சில நிமிடங்களில் பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும்.


ஆன்லைனில் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை பார்க்க விரும்பினால் இபிஎஃப் பாஸ்புக் போர்ட்டலுக்கு சென்று அதில் உங்களது யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.  அதன்பின்னர் டவுன்லோடு/வியூ பாஸ்புக் என்பதைக் கிளிக் செய்யவும்.  இதனை செய்த பிறகு உங்களது பிஎஃப் கணக்கின் பாஸ்புக் திரையில் தெரியும் அதில் நீங்கள் இருப்பை சரி பார்த்துக் கொள்ளலாம்.  ஸ்மார்ட்போனில் UMANG செயலியைப் டவுன்லோடு செய்வதன் மூலமும் இருப்பை பார்க்கலாம்.  அதில் Employee Centric Services என்பதைக் கிளிக் செய்து, வியூ பாஸ்புக் என்பதை கிளிக் செய்து, யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு, மொபைலுக்கு வரும் ஓடிபியை உள்ளிடுவதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days 2022 Sale: டாப் பிராண்ட் போன்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ