EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!
பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது, இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் பிஎஃப் கணக்கில் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது, அரசாங்கம் பிஎஃப் கணக்குதாரர்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் 8.1 சதவீதம் இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது. கணக்கிடப்பட்ட அந்த வட்டி தொகையானது கூடிய விரைவில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படும், சர்வன்ட் அக்கவுண்டில் இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் கணக்குதாரர்கள் கடந்த ஆண்டில் வட்டியை அவ்வளவு சுலபமாக பெற்றுவிடவில்லை, அவர்கள் வங்கி கணக்கில் வட்டியை பெறுவதற்காக கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை காத்திருந்தனர். கடந்த ஆண்டு சில சூழ்நிலை சிக்கல்கள் காரணமாக கணக்குதாரர்களின் வட்டியை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அரசு கூடிய விரைவில் மக்களின் வங்கி கணக்கில் வட்டித்தொகையை வரவு வைத்துவிடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 24 வருடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வட்டியின் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன?
உங்கள் கணக்கில் ரூ.10,00,000 இருந்தால் உங்களுக்கு ரூ,81,000 வட்டியாக வழங்கப்படும், அதுவே உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ. 700,000 இருந்தால் உங்களுக்கு ரூ. 56,700 வட்டி கிடைக்கும் மற்றும் உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.50,00,00 இருந்தால் ரூ.40,500 வரை வட்டி வழங்கப்படும். மேலும் உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.1,00,000 இருந்தால் ரூ.8100 வட்டி கிடைக்கும். உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பை சரிபார்க்க மிஸ்டு கால் கொடுக்கலாம், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்களது பிஎஃப் இருப்பின் தகவல் கிடைக்கும்.
மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ