இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) டோக்கனைசேஷன் விதி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் ஆப்ஸ் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளும் தனிப்பட்ட டோக்கன்களுடன் செய்யப்பட வேண்டும். கார்டு டோக்கன்சேஷன் என்பது வணிகர்களுக்கு கட்டாயமாக்கப்படும். உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளை டோக்கனைஸ் செய்வது எப்படி என்பதை அறிய வேண்டும் என்றால், இந்த ஆறு எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...
கார்டு டோக்கனைசேஷன் என்பது 'டோக்கன்கள்' எனப்படும் மாற்று 16-இலக்கக் குறியீட்டைக் கொண்டு உண்மையான கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களை மாற்றுவதாகும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வெவ்வேறாக இருக்கும். இது ஒரு அல்காரிதம் மூலம் உருவாக்கப்படும். இந்த டோக்கன் முறை உங்களின் கிரெடிட்/டெபிட் கார்டின் முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தாமல் பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன?
.@RBI Kehta Hai..
Want to generate a token for your debit/ credit card? Follow these 6 simple steps to tokenisation. It’s simple, it’s safe, it’s convenient.#BeAware #BeSecure#rbikehtahai #StaySafe #Tokenisationhttps://t.co/mKPAIpnAObhttps://t.co/RWS9vBbEZH pic.twitter.com/vTyBBeTCDH— RBI Says (@RBIsays) July 27, 2022
உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுக்கான டோக்கனை உருவாக்க ஆர்பிஐ கொடுத்த ஆறு எளிய வழிமுறைகள்:
- பொருள் வாங்குவதற்கு கட்டணப் பரிவர்த்தனையைத் தொடங்குவதற்கு, ஏதேனும் ஈ-காமர்ஸ்/வணிக இணையதளம் அல்லது அப்ளிகேஷனை செல்லவும்.
- செக்-அவுட்டின்போது, உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டின் விவரங்களை உள்ளிடவும். மாறாக, பணம் செலுத்தும் முறையில் நீங்கள் விரும்பும் வங்கியின் டெபிட்/கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும் மற்ற விவரங்களை உள்ளிடவும்.
- "RBI வழிகாட்டுதல்களின்படி உங்கள் கார்டைப் பாதுகாக்கவும்" அல்லது "RBI வழிகாட்டுதல்களின்படி உங்கள் கார்டை டோக்கனைஸ் செய்யவும்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- உங்கள் வங்கி கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTPயை உள்ளிட்டு, உங்களின் பரிவர்த்தனையை முடிக்கவும்.
- உங்கள் கார்டின் உண்மையான விவரங்களுக்குப் பதிலாக உங்கள் டோக்கன் உருவாக்கப்பட்டு அதில் சேமித்து வைக்கப்படும்.
- நீங்கள் மீண்டும் அதே இணையதளம் அல்லது அப்ளிகேஷனைப் செல்லும்போது, பணம் செலுத்துவதற்கான உங்கள் கார்டை அடையாளம் காண உதவும் வகையில், சேமித்த கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள் காட்டப்படும்.
டோக்கன்கள் வணிகர் சார்ந்ததாக தான் இருக்கும்.ஒரு வாடிக்கையாளர் ஒரு கார்டை வைத்திருந்தாலும், வெவ்வேறு வணிகர்களிடம் இருந்து ஆன்லைன் கொள்முதல்களைப் பயன்படுத்தினால், வெவ்வேறு டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு டோக்கனில் 16 இலக்கங்கள் இருக்கும். டோக்கன்கள் வணிகர் தளத்தில் சேமிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர் அவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் கடைசி நான்கு இலக்க கார்டு எண்களை தெரிந்துவைத்துக்கொண்டாலே போதுமானது.
மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ