Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன?

Aadhaar Update: சமீபத்தில், ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க யுஐடிஏஐ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 07:58 PM IST
  • ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது.
  • பெரும்பாலான வேலைகளில் இது தேவைப்படுகிறது.
  • ஆதார் உதவியுடன் ஆன்லைனில் செய்யக்கூடிய பல பணிகள் உள்ளன.
Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன? title=

ஆதார் அட்டை புதுப்பிப்பு: இன்றைய தேதியில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பெரும்பாலான வேலைகளில் இது தேவைப்படுகிறது. ஆதார் உதவியுடன் ஆன்லைனில் செய்யக்கூடிய பல வேலைகள் உள்ளன. இருப்பினும், இதற்கு மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் தொடர்பான எந்தவொரு செயல்முறையையும் தொடர OTP தேவைப்படும். இது பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும். சமீபத்தில், ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க யுஐடிஏஐ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை உங்கள் தகவல்கள் புதுப்பிக்கப்படும். நகலெடுப்பதைத் தவிர்க்கவும், தரவைப் பாதுகாக்கவும் இது செய்யப்படும். இருப்பினும், இது கட்டாயமாக இருக்காது. விருப்பட்டால் அதை செய்துகொள்ளலாம். 

ஆதாரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளன

உங்கள் ஆதாரில் முக்கியமாக இரண்டு வகையான தகவல்கள் உள்ளன. முதல் தகவல் மக்கள்தொகை மற்றும் இரண்டாவது தகவல் பயோமெட்ரிக்ஸ் தொடர்பானது. பயோமெட்ரிக் தகவலில் கைரேகை, ஐரிஷ் ஸ்கேன், புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவை அடங்கும். இரண்டாவது மக்கள்தொகை விவரம். இதில் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ 

பயோமெட்ரிக் அப்டேஷனுக்கு ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும்

ஆதாரின் அனைத்து தகவல்களையும் புதுப்பிக்கும் வசதி உள்ளது. இருப்பினும், அதற்கு தேவையான விதிகள் மற்றும் கட்டணங்கள் உள்ளன. நீங்கள் பயோமெட்ரிக் தகவலில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றால், இதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று அதை செய்யலாம். மக்கள்தொகை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதி உள்ளது. 

mAadhaar அல்லது UIDAI இணையதளத்திற்கு சென்று இந்த வேலையை ஆன்லைனில் செய்யலாம். இருப்பினும், பிறந்த தேதி மற்றும் பாலினத்தை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். இதற்கும் சரியான சான்று சமர்ப்பிக்க வேண்டும். UIDAI இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, பெயர்களை இரண்டு முறை புதுப்பிக்கலாம்.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

- பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கான கட்டணம் ரூ. 100 ஆகும்.

- டெமோகிராஃபிக் அப்டேட்டுக்கான கட்டணம் ரூ.50 ஆகும்.

- பயோமெட்ரிக் மற்றும் டெமோகிராஃபிக் தகவல்கள் இரண்டையும் புதுப்பிக்க வேண்டும் என்றால், இதற்கான கட்டணமும் ரூ.100 ஆகும். 

- அனைத்து கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News