EPFO அட்டகாசமான அப்டேட்: 75 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்!!
EPFO Update: பிஎஃப் வட்டி மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மற்றொரு புதிய அப்டேட் ஒன்றும் வந்துள்ளது. இதன் கீழ் இபிஎப்-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள வரம்பை இபிஎஃப்ஓ அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
EPFO Update: அலுவலக பணியில் உள்ளவரா நீங்கள்? உங்கள் மாத சம்பளத்தில் பிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) தற்போது அனைத்து ஊழியர்களின் கணக்குகளிலும் வட்டிப் பணம் டெபாசிட் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தற்போதைய நிலையில் சுமார் ஆறு கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.
பிஎஃப் வட்டி மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மற்றொரு புதிய அப்டேட் ஒன்றும் வந்துள்ளது. இதன் கீழ் இபிஎஸ்-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள வரம்பை இபிஎஃப்ஓ அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்து இபிஎஃப்ஓ பேசி வருவதாகவும், இந்த முடிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ் ஊதிய வரம்பை உயர்த்தினால், அதில் அதிக நபர்கள் சேருவார்கள். கூடுதல் நபர்கள் சேரும்போது, கூடுதல் தொகை என்பது அதிகாரத்தின் சுமையை அதிகரிக்கும். தற்போது, இதற்கு பொது ஆணையத்திடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை EPFO-ன் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு (Central Government) ஒவ்வொரு ஆண்டும் 6,750 கோடி ரூபாய் செலவழிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், 7.5 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். இதற்கு முன்னர் இத்தகைய செயல்முறை கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிஎஃப் -க்கான அதிகபட்ச வரம்பு அப்போது ரூ.6,500 இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் படிக்க | 8th Pay Commission: அதிரடி 44% ஊதிய உயர்வுடன் வரும் அடுத்த ஊதியக்கமிஷன்.. எப்போது?
எனினும், இந்த முடிவை அங்கீகரித்தால் அரசின் சுமை சிறிது சிறிதாக அதிகரிக்கும். ஏனெனில், அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.6 ஆயிரத்து 750 கோடியை செலவழிக்கிறது. இப்போது இந்த ஊதிய வரம்பு உயர்வு முடிவுக்கும் ஒப்புதல் அளித்தால், அரசின் மீது அதிக சுமை விழும்.
இருப்பினும், இது நடந்தால், இபிஎஃப்ஓ எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக சுமார் 75 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் நேரடியாக பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
EPS தொடர்பான தற்போதைய விதி என்ன?
ஒரு நபர் ஒரு வேலையில் சேர்ந்து இபிஎஃப் (EPF) -இல் ஒரு உறுப்பினர் ஆகும்போது, அவர் EPS- லும் உறுப்பினர் ஆகிறார். ஒரு ஊழியர் இபிஎஃப் -இல் 12% பங்களிப்பை அளிக்கிறார். அவரது நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை அளிக்கின்றது. ஆனால் அதில் 8.33 சதவீதம் EPS -க்கு செல்கிறது. தற்போது இபிஎஸ் -க்கான அதிகபட்ச ஓய்வூதிய ஊதிய வரம்பு வெறும் ரூ. 15 ஆயிரமாக உள்ளது.அதிகபட்ச வருடாந்திர பங்கு (15000 இல் 8.33%) ரூ. 1250 ஆக இருக்கும்.
ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ஊழியர் ஓய்வு பெற்ற பிறகும் 15,000 ரூபாயாகக் கருதப்படுகிறது. அதன்படி ஒரு ஊழியர் EPS இன் கீழ் அதிகபட்சமாக 7,500 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 இன் கீழ், இபிஎஃப்ஓ ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிதி வடிவத்தில் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
மேலும் படிக்க | தீபாவளி போனஸ்! Tata Punch காம்பாக்ட் SUV காரை பரிசாக வழங்கும் ஃபார்மா கம்பெனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ