EPFO Higher Pension: நிவாரணம் அளித்த இபிஎஃப்ஓ... உயர் ஓய்வூதிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டது
Higher Pension: முதலாளிகள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைய இருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி: EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) அதிக ஊதியத்திற்கான ஓய்வூதிய ஊதிய விவரங்களை பதிவேற்ற முதலாளிகள் / நிறுவனங்களுக்கு கூடுதலாக மூன்று மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. முதலாளிகள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைய இருந்த அசல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வியாழன் அன்று வெளியிடப்பட்ட தொழிலாளர் அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இப்போது, மீண்டும் பல கோரிக்கைகள் முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அதில் விண்ணப்பதாரர் ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களின் ஊதிய விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கூடுதல் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 29, 2023 நிலவரப்படி விருப்பம்/ கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான 5.52 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் முதலாளிகளிடம் நிலுவையில் உள்ளன" என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, மத்திய அறங்காவலர் குழுவின் தலைவர், முதலாளிகள் ஊதிய விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க டிசம்பர் 31, 2023 வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 11, 2023 வரை ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களிடமிருந்து விருப்பம்/கூட்டு விருப்பங்களின் சரிபார்ப்புக்கான (வெரிஃபிகேஷன்) 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
முன்னதாக, உயர் ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான விருப்பங்கள்/கூட்டு விருப்பங்களின் (Option/Joint Options) சரிபார்ப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO https://zeenews.india.com/tamil/business-news/epfo-big-update-how-to-change-mobile-number-in-epf-account-online-see-full-process-here-465578) ஆன்லைன் வசதி அளிக்கப்பட்டதாக தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இணங்க தகுதியான ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களுக்கு இந்த வசதி இருந்தது.
மேலும் படிக்க | EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
ஆகஸ்ட் 2014 இல், EPF க்கான சட்டப்பூர்வ ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிக ஊதியத்துடன் புதிதாக சேர்பவர்கள் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) உறுப்பினர் தகுதிக்கு தகுதியற்றவர்கள் என்று அப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டது. இப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஓய்வூதிய ஊதியக் கணக்கீடு கடந்த 60 மாத ஊதியத்தின் சராசரியாக மாற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்த 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இல்லையெனில், கூடுதல் பங்களிப்புகள் PF கணக்கிற்கு மாற்றப்படும், எதிர்கால பங்களிப்புகள் ஊதிய உச்சவரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டரீதியான சவால்கள் தொடர்ந்தன. இது நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வழிவகுத்தது. செப்டம்பர் 1, 2014 அன்று EPS உறுப்பினர்களாக இருந்த ஊழியர்களின் PF பங்களிப்பிற்கு ஊதிய உச்சவரம்பு இல்லை என்று தீர்ப்பளித்தது. உயர் ஓய்வூதியத்தை தேர்வு செய்ய நான்கு மாத கால இடைவெளி அளிக்கப்பட்டது.
இந்த வசதி பிப்ரவரி 26, 2023 அன்று தொடங்கப்பட்டது. மே 3, 2023 வரை மட்டுமே இந்த வசதி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஊழியர்களின் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, தகுதியான ஓய்வூதியதாரர்கள்/உறுப்பினர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான நேரம் ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. தகுதியான ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீக்க 15 நாட்கள் கடைசி அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, பணியாளர்கள் விருப்பத்தேர்வுகள்/கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் படிக்க | EPFO புதிய விதிகள்: இனி PF கணக்குதாரர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ