EPFO உறுப்பினர்களுக்கு நற்செய்தி: கல்வி, திருமணம், ஹவுசிங் ஆகியவற்றுக்கு Auto Claim வசதி அறிமுகம்
EPFO Claim Settlement: EPFO அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் க்ளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
EPFO Claim Settlement: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் பணியாளர் வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகின்றது. மாதா மாதம் பிஎஃப் நிதியில் பங்களிக்கும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இபிஎஃப்ஓ இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) மகிழ்ச்சியான செய்தியை அளித்துளது. அதை பற்றி இங்கே காணலாம்.
அனிருத் பிரசாத் என்பவருக்கு நடந்த உண்மையான அனுபவம் இபிஎஃப்ஓ அமைப்பின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது, சிகிச்சை செலவுக்காக அவர் க்ளெய்ம் செய்திருந்த தொகை 3 நாட்களுக்குள் அவருக்கு கிடைத்தது. அனிருத் பிரசாத் என்பவர் 2024 மே 9 அன்று நோய்க்கான சிகிச்சைக்காக EPFO -இல் விண்ணப்பித்து, பாரா 68J இன் கீழ் முன்பணம் கோரினார். அதன் பின்னர் இரண்டே நாட்களில், அதாவது 11 மே 2024 அன்று, அவரது அட்வான்சுக்கான க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்டு மூன்றே நாட்களில் இபிஎஃப்ஓ அனிருத் பிரசாத்துக்கு முன்பணமாக ரூ.92,143 செலுத்தியுள்ளது. இது போல பல சமயங்களில் தனது க்ளெய்ம்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
EPFO இன் கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு பரிசு
EPFO அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் க்ளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. EPFO ஆட்டோ க்ளைம் தீர்வை (Auto Mode Settlement) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மனித தலையீடு இல்லாமல் IT அமைப்பு மூலம் க்ளெய்ம்கள் அனைத்தும் தானாகவே தீர்க்கப்படும். நோய்க்கான சிகிச்சைக்காக கோரப்படும் முன்பணத்தை க்ளைம் செட்டில் செய்வதற்கான ஆட்டோ மோட் வசதி ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது.
45.95 கோடி ரூபாய்க்கான க்ளெய்ம்களுக்காக 13011 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
நடப்பு ஆண்டில், 2.25 கோடி பேர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என நம்பப்படுகிறது. EPFO மே 6, 2024 அன்று நாடு முழுவதும் இந்தச் சேவையைத் தொடங்கியது. இதுவரை 13,011 வழக்குகளில் 45.95 கோடி ரூபாயை விரைவாகச் செலுத்துவதற்கு EPFO ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!
கல்வி, திருமணம் மற்றும் வீட்டு வசதிக்கு ஆட்டோ அட்வான்ஸ் வசதி
2023-24 நிதியாண்டில், EPFO 4.45 கோடி க்ளைம்களைத் செட்டில் செய்துள்ளது. அதில் 2.84 கோடி அதாவது 60 சதவிகிதக் க்ளெய்ம்கள் அட்வான்ஸ் க்ளெய்ம்களாகும். நிதியாண்டில் செட்டில் செய்யப்பட்ட அட்வான்ஸ் கோரிக்கைகளில், 89.52 லட்சம் க்ளைம்கள் ஆட்டோ-மோட் மூலம் செட்டில் செய்யப்பட்டன. எளிதான செயல்முறைகளுக்கான வசதியை வழங்குவதற்காக, EPF திட்டம் 1952ன் கீழ் 68K (கல்வி மற்றும் திருமணத்திற்காக) மற்றும் 68B (வீடு) ஆகியவற்றிற்கு ஆட்டோ க்ளெய்ம் வசதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ க்ளைம் பயன்முறையின் கீழ் உள்ள தொகை ரூ. 50,000 லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.
மனித தலையீடு இல்லாத செட்டில்மெண்ட்
இந்த ஆட்டோ செட்டில்மென்ட் (Auto Settlement) செயல்முறை தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் செய்யப்படும். இதற்கு மனித தலையீடு தேவையில்லை. KYC, தகுதி மற்றும் வங்கி சரிபார்ப்பு மூலம் செய்யப்படும் க்ளெய்ம்கள் IT கருவிகள் மூலம் தானாகவே செயலாக்கப்படும். இந்த வசதியின் காரணமாக, முன்பணத்திற்கான க்ளைம் செட்டில்மென்ட் எடுக்கும் காலம் 10 நாட்களில் இருந்து 3 முதல் 4 நாட்களாக குறைக்கப்படும். அட்னான்சுக்கான ஒரு க்ளெய்ம் தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் செட்டில் செய்யப்படாவிட்டால், அது திரும்பப் பெறப்படாது, நிராகரிக்கவும் படாது. மாறாக, அந்த க்ளெய்மானது ஆய்வு மற்றும் ஒப்புதல் மூலம் இரண்டாம் நிலையில் செட்டில் செய்யப்படும். வீடு, திருமணம் அல்லது கல்விக்கான ஆட்டோ க்ளெய்ம் வசதியின் காரணமாக, தன்னியக்க முறையில் தீர்வு வசதியின் விரிவாக்கம், குறுகிய காலத்திற்குள் உறுப்பினர்களுக்கு நிதி கிடைக்கச் செய்யும். இது இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) பெரிய வழியில் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ