வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2024, 01:36 PM IST
  • தங்க நகை தொடர்பாக சரியான ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஏற்படுத்தியுள்ள விதிகள்.
  • CBDT தங்க பிஸ்கட்அல்லது காயின் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!! title=

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. தங்கம் நாம் செழிப்பாக வாழ்கிறோம் என்பதை காட்டுவதோடு மட்டுமின்றி, குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. மேலும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். இந்நிலையில், வீட்டில் தங்கம் வைப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி பலர் மனதிலும் அடிக்கடி எழலாம்.

வீட்டில் தங்கம் வைத்திருப்பது குறித்து அரசு எந்த வரம்பும் விதிக்கவில்லை என்றாலும்,  தங்கம் அல்லது தங்க நகை தொடர்பாக சரியான ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.  வருமான வரித்துறையினர் நடத்தும் ரெய்டு சம்பவங்கள் குறித்து சமீபகாலமாக கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தையும் வருமான வரித்துறையினர் (Income Tax) பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது வழக்கம். பலமுறை பெண்கள் அணிந்திருந்த நகைகளும் கூட பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, வருமான வரி செலுத்துவோருக்கும், வரித்துறையினருக்கும் இடையே பதற்றமான சூழல் உருவானது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில் எந்த ஒரு சோதனையிலும் தங்கம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கைப்பற்றப்படாது என்று கூறப்பட்டுள்ளது. வரி மற்றும் முதலீட்டு நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், திருமணமான பெண் 500 கிராம் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கத்தையும், ஆண்கள் 100 கிராம் தங்கத்தையும் வைத்திருக்கலாம் என விதிகள் உள்ளதாக கூறினர். சோதனையின் போது மேலே குறிப்பிட்ட அளவுள்ள தங்க நகை வாங்கியதற்கான ஆவணங்கள் இல்லையென்றாலும், அவற்றை பறிமுதல் செய்ய முடியாது. இது நகைகள் தொடர்பான விதி என்பது குறிப்பிடத்தக்கது. CBDT சுற்றறிக்கையில் தங்க பிஸ்கட் அல்லது காயின் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!

முன்னதாக, தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1968 என்ற சட்டத்தின் கீழ், வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு விதிக்கப்பட்டது. ஆனால் அது 1990ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டில், CBDT தனது அதிகாரிகளுக்கு மேலே குறிப்பிட்ட வரம்பு வரை தங்க நகைகளை பறிமுதல் செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டது. வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோர் விசாரணையின் போது துறையின் முன் ஆஜராகுமாறு கூறும்போது, இவ்வளவு தங்கம் தொடர்பான சரியான ஆவணங்களைக் காட்ட வேண்டும்.

ஒருவருக்கு தாத்தா பாட்டி அல்லது மூதாதையர்களிடமிருந்து தங்க நகைகள் பரம்பரையாக இருந்தால், அதே விதி பொருந்தும். இந்த நகைகள் தங்கள் மூதாதையர்களுடையது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படாது. அப்படி இல்லை என்றால் அந்த தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு செல்லலாம். சரியான ஆவணங்களுடன் அவர்களை பின்னர் அவை திரும்ப கிடைக்கும்.

மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News