EPFO ஜாக்பாட் அப்டேட்: அடிச்சுது லாட்டரி.. விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்
EPFO Update: பிஎஃப் ஊழியர்களுக்கு 8.15 சதவீத வட்டியை அரசு அறிவித்தது. அதன்பிறகு இந்த வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
EPFO Update: ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது.
தற்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் ஊழியர்கள் விரைவில் வட்டித் தொகையைப் (PF Interest) பெற உள்ளனர். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். சில நாட்களுக்கு முன், பிஎஃப் ஊழியர்களுக்கு 8.15 சதவீத வட்டியை அரசு அறிவித்தது. அதன்பிறகு இந்த வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது தொழிலாளர்களின் காத்திருப்பும் முடிவுக்கு வர உள்ளது.
ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்பதுதான் இப்போது அனைவரின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. EPF கணக்கில் (EPF Account) வட்டித் தொகையை டெபாசிட் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதி குறித்து அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இது ஒரு பெரிய நல்ல செய்தியாக இருக்கும். உங்கள் EPF கணக்கில் எவ்வளவு வட்டி பணம் வந்துள்ளது என்பதை அறிய எங்கும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செக் செய்யலாம்.
பிஎஃப் ஊழியர்களின் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்படும்?
பிஎஃப் ஊழியர்களின் (PF Subscribers) கணக்கில் அரசு 8.15 சதவீத வட்டியில் பணத்தை டெபாசிட் செய்யப் போகிறது. இது ஒரு பெரிய பரிசாக இருக்கும். ஊழியர்களின் EPF கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு வட்டி கிடைக்கும்.
உதாரணமாக, ஒருவரது கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியில் அவருக்கு சுமார் ரூ.50,000 கிடைக்கும். பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், ரூ.42,000 வட்டியாக கிடைக்கும். பிஎஃப் கணக்கில் 7 லட்சம் ரூபாய் இருந்தால், 58,000 ரூபாய் ஈபிஎஃப் கணக்கில் வட்டியாக கிடைக்கும். இது தவிர, பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை சரிபார்க்க எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செக் செய்யலாம்.
இந்த வழியில் பிஎஃப் தொகையை செக் செய்யலாம்
உங்கள் EPF கணக்கில் எவ்வளவு வட்டிப் பணம் வந்துள்ளது என்பதைச் சரிபார்க்க மிக எளிய முறைகள் உள்ளன. பின்வரும் வழிகளில் வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம்.
1. உமங் செயலி மூலம்
2. இபிஎஃப்ஓ இணையதளம் மூலம்
3. மிஸ்ட் கால் கொடுத்து
4. எஸ்எம்எஸ் அனுப்பி
1. உமங் செயலி:
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம்.
2. இபிஎஃப்ஓ இணையதளம்
EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
3.மிஸ்ட் கால்
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.
4. எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள்.
மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ