EPFO அப்டேட்: ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் கூடிய விரைவில் வட்டியின் பலனை பெறவுள்ளனர். எனினும், இந்த வட்டி தொகை எப்போது, எந்த தேதியில் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இது விரைவில் நடக்கும் என்று நம்பப்படுகின்றது. உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. 


இபிஎஃப்ஓ கணக்கில் வரும் பெரிய தொகை


அரசு அறிவித்துள்ள படி, 8.15 சதவீத வட்டி விகிதத்தில் தொகை கணக்கில் வரும். இதன் படி மொத்தமாக எவ்வளவு பணம் வரும் என்ற கேள்வி சந்தாதாரர்களின் மனதில் கண்டிப்பாக இருக்கும். அதன் கணக்கீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | பெண்களுக்கு லாட்டரி.. வெறும் 2 வருடத்தில் பணக்காரர்களாகலாம்


ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ. 6 லட்சம் இருந்தால், 8.15 சதவீத வட்டியாக அவர் கணக்கில் சுமார் ரூ.50,000 தொகை வரவு வைக்கப்படும். ஊழியரின் கணக்கில் ரூ.7 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.58,000 தொகையை வட்டியாக கிடைக்கும். EPF கணக்கில் 8 லட்சம் ரூபாய் இருந்தால், அதற்கு வட்டியாக 66,000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் தொகையைச் சரிபார்க்க எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த எளிய வழிகளில் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை தெரிந்துகொள்ளலாம். 


பிஎஃப் கணக்கில் எவ்வளவு பனம் டெபாசிட் செய்யப்பட்டது? இப்படி தெரிந்துகொள்ளுங்கள்


பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை செக் செய்ய, எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இருக்காது. பின்வரும் வழிகளில் வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம்.


1. உமங் செயலி மூலம்
2. இபிஎஃப்ஓ இணையதளம் மூலம்
3. மிஸ்ட் கால் கொடுத்து
4. எஸ்எம்எஸ் அனுப்பி


1. உமங் செயலி:
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். 


2. இபிஎஃப்ஓ இணையதளம்
EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


3.மிஸ்ட் கால்
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.


4. எஸ்எம்எஸ் 
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 


மேலும் படிக்க | டிசம்பரில் டூர் செல்ல பிளானிங்கா? மூத்த குடிமக்களுக்கு ரயில்வே ஜாக்பாட் பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ