EPFO மெகா அப்டேட்: வருகிறது வட்டி தொகை.. PF Balance செக் செய்வது எப்படி? இதோ விவரம்

EPFO Update: உங்களின் EPF கணக்கு இருப்பை பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து, EPFO, பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2023, 03:46 PM IST
  • மிஸ்டு கால் மூலம் EPF இருப்பை செக் செய்யலாம்.
  • எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்.
  • EPFO ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி EPF இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
EPFO மெகா அப்டேட்: வருகிறது வட்டி தொகை.. PF Balance செக் செய்வது எப்படி? இதோ விவரம் title=

EPF இருப்பை எவ்வாறு செக் செய்வது: ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. இபிஎஃப்ஓ அவ்வப்போது பல வித புதுப்பிப்புகளை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.

உங்களின் EPF கணக்கு இருப்பை பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து, EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, பணியாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருப்புத் தொகையைப் பற்றிய தகவலைப் பெற, தங்கள் நிறுவனத்தால் பகிரப்பட்ட வருடாந்திர EPF அறிக்கையை நம்பியிருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், சமீபத்திய முன்னேற்றங்கள் மூலம், EPF இருப்பைச் சரிபார்ப்பது மிகவும் எளிதாகி விட்டது. மேலும் இது அனைவரும் அணுகக்கூடிய விதத்தில் உள்ளது. பணியாளர் EPF இருப்பை சரிபார்க்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிஸ்டு கால் மூலம் EPF இருப்பை செக் செய்யலாம்

நீங்கள் UAN (Universal Account Number) போர்ட்டலில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்து, UAN உடன் KYC-ஐ முடித்திருந்தால், மிஸ்ட் கால் செய்து உங்கள் EPF இருப்பைச் செக் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இரண்டு முறை ஒலித்த பிறகு, அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். மேலும் உங்கள் இருப்பு விவரங்கள் மற்றும் உங்கள் PF கணக்கில் கடைசியாகச் செலுத்தப்பட்ட பங்களிப்பு விவரங்கள் அடங்கிய SMS ஒன்றை நீங்கள் பெறுவீர்கள்.

எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்

EPFO இல் உங்கள் UAN -ஐ பதிவு செய்து, SMS அனுப்பி உங்கள் PF இருப்பை விவரமாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு EPFOHO UAN ENG என்ற தலைப்பில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். அங்கு UAN என்பது உங்களின் தனித்துவமான UAN மற்றும் ENG என்பது நீங்கள் விரும்பும் மொழியின் முதல் மூன்று எழுத்துக்கள் ஆகும். இந்தச் செய்தியை 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். உங்கள் PF இருப்பு விவரங்களுடன் பதிலைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | EPFO முக்கிய அப்டேட்: பிஎஃப் சந்தாதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

EPFO ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி EPF இருப்பை தெரிந்துகொள்ளலாம் 

புதிய EPFO ஆன்லைன் போர்ட்டல் ஒரு ஊழியரின் PF பாஸ்புக்கைப் பற்றி விசாரிக்க வசதியான வழியை வழங்குகிறது. இந்த அம்சத்தை அணுக…

- EPFO இணையதளத்திற்கு செல்லவும்.

- “Our Services” பகுதிக்குச் சென்று, “For Employees” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- “Services” என்பதைக் கிளிக் செய்து, “Member Passbook” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு உங்களது UAN ஆனது உங்கள் வேலை வழங்குநரால் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

UMANG மொபைல் செயலியைப் பயன்படுத்தி EPF இருப்பை தெரிந்துகொள்வது எப்படி? 

உங்கள் PF இருப்பைச் சரிபார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக UMANG செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் கையேட்டை பார்த்து விவரங்களை தெரிந்துகொள்வதுடன், கோரிக்கைகளை எளிதாகப் பெறவும் கண்காணிக்கவும் இந்த செயலி உங்களை அனுமதிக்கிறது. இந்த செயல்முறையை தொடங்குவதற்கு, உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘ஒன் டைம் பாஸ்வர்டை’ உள்ளிட்டு செயலியில் பதிவு செய்யவும்.

மேலும் படிக்க | EPFO மகிழ்ச்சியான அப்டேட்: ஊழியர்களுக்கு அடித்தது லாட்டரி... கணக்கில் வட்டித்தொகை.. இப்படி செக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News