ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அமைப்புசாரா தொழிலார்களின் நலனுக்காக சில நன்மைகளை வழங்கவிருக்கிறது.  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியத் திட்டத்தின் கவரேஜை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.  இதன்மூலம் இபிஎஃப்ஓ ஆனது ஒவ்வொரு ஊழியருக்கும் 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்கிறது.  இந்த திட்டம் உலகளாவிய திட்டம் என்று கூறப்படுகிறது, ஊழியர்களின் ஓய்வூதிய சவால்கள் பலவற்றை சமாளிக்கும் நோக்ககில் இது உருவாக்கப்பட்டுள்ளது.  மாதந்தோறும் ரூ. 15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் கிடையாது, அதேசமயம் அவர்களுக்கு ஒரு எளிய ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!


இந்த புதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் போன்ற பல திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.  இந்த ஓய்வூதியப் பலன்களுக்கான குறைந்தபட்ச சேவை காலம் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும், இபிஎஃப்ஓ உறுப்பினர் ஒருவர் 60 வயதிற்குள் இறந்துவிட்டால் அந்த ஊழியரது குடும்பத்திற்கு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும்.  ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையாக ரூ.3000 என மொத்தமாக இந்த திட்டத்தில் ரூ.5.4 லட்சம் டெபாசிட் செய்து மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.


மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் அதிக பங்களிப்பைத் தேர்வுசெய்து அதிக ஓய்வூதியத்திற்காக, அதிக தொகையை டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று கூறியது.  தற்போது ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிந்து மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு இபிஎஃப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொரு ஊழியரும் அவரது அடிப்படை சம்பளத்தில் 12% இபிஎஃப் திட்டத்தில் பங்களிக்க வேண்டும்.  ஓய்வூதியத் திட்டத்தில் முதலாளியின் பங்களிப்பில் 8.33% டெபாசிட் செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ