PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...
ஓய்வூதியம்: 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
EPF என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அரசின் ஒரு சேமிப்புத் திட்டம் ஆகும். ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை EPFO அமைப்பு நிர்வகிக்கிறது. மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் சம்பளத்தில் 12 சதவீதத்தை EPF கணக்கில் போடுவார்கள். ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனமும் சம்பளத்தின் 12 சதவீத தொகையை ஊழியரின் PF தொகைக்கு பங்களிக்க வேண்டும்.
PF கணக்கில், நிறுவனத்தின் மூலம் போடப்படும் 12 சதவிகிதம் இரண்டு பங்குகளாக முதலீடு செய்யப்படுகிறது. இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) முதலீடு செய்யப்படும். மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் EPF கணக்கில் முதலீடு செய்யப்படும். EPF திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதாகும்.
ஓய்வுக்குப் பிறகு நமக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
EPFO ஓய்வூதிய விதிகள்
1. நீங்கள் PF கணக்கில் குறிந்த பட்சம் 10 வருடங்கள் பங்களித்திருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுவீர்கள் என EPFO விதிகள் கூறுகின்றன.
2. நீங்கள் 50 வயதில் ஓய்வூதியத்தைப் பெற தகுதி உடையவர் என்றாலும், முன்னதாகவே ஓய்வூதியம் பெறும் போது ஒவ்வொரு ஆண்டும் 4% கழிக்கப்படும்.
3. ஓய்வூதியம் பெற 58 வயது வரை காத்திருந்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
4. நீங்கள் 58 வயதிற்கு பிறகு ஓய்வூதியத்தை கோராமல் 60 வயது வரை ஒத்திவைத்தால், ஒவ்வொரு ஆண்டும் 4% உயர்வு மூலம் 8% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்க... இந்த விஷயங்களில் கவனம் தேவை
ஓய்வூதிய கணக்கீடு
தற்போதைய EPFO விதிகளின்படி, ஓய்வூதியம் பெறக்கூடிய அடிப்படை சம்பளத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000.
ஓய்வூதியம் கணக்கிட பயன்படுத்தப்படும் சூத்திரம்:
சராசரி அடிப்படை சம்பளம் x சர்வீஸ் காலம் / 70 = மாதாந்திர ஓய்வூதியம்
60 வயதில் கிடைக்கும் ஓய்வூதியத்தின் அளவு
நீங்கள் 23 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து 58 வயதில் ஓய்வு பெற்றீர்கள் என்றால், நீங்கள் மொத்தம் 35 ஆண்டுகள் சர்வீஸ் செய்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான ஓய்வூதிய கணக்கீடு கீழ்கண்ட வகையில் இருக்கும்.
சராசரி அடிப்படை சம்பளம்= ரூ 15,000
சேவை காலம் = 35 ஆண்டுகள்
ஓய்வூதியம்: மாதம் 15,000 x 35 / 70 = ரூ 7,500
நீங்கள் 60 வயதில் ஓய்வூதியம் கோரினால், கூடுதலாக 8% அதிகரிக்கும்.
ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விஷயங்கள்
PF ஓய்வூதியத்தின் கணக்கீடு கடந்த 60 மாதங்களாக உங்களின் சராசரி சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது.
வேலையின் காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக உங்கள் ஓய்வூதியம் இருக்கும்.
ஓய்வூதியம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைப் பெற, கண்டிப்பாக EPFO விதிகளைப் புரிந்துகொண்டு, உங்கள் கணக்கை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ