EPF கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ

EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2024, 12:31 PM IST
  • இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?
  • அதிக சிரமம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்யலாம்.
  • இதை பல்வேறு வழிகளிலும் செய்யலாம்.
EPF கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ

EPF Balance Check: மாதா மாதம் பணியாளர்கள் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) அரசாங்கம் நல்ல வட்டியையும் அளிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை காலப்போக்கில் கணிசமான தொகையாக சேர்கிறது.

Add Zee News as a Preferred Source

இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) அவ்வப்போது, தாங்கள் பங்களிக்கும் தொகை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், நிறுவனம் தங்கள் கணக்கில் மாதா மாதம் முறையாக பணம் செலுத்துகிறதா என்பதையும் கண்கானிகக் வேண்டும். இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை செக் செய்வது மிக எளிதான ஒரு செயல்முறையாகும். 

EPF Balance Check: இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?

அதிக சிரமம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்யலாம். இதை பல்வேறு வழிகளிலும் செய்யலாம். உங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்த்து, உங்கள் பங்களிப்புகளைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகள் உள்ளன.

ஆஃப்லைனில் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் வழிகள்
- மிஸ்டு கால்
- எஸ்எம்எஸ்

ஆன்லைனில் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் வழிகள்
- இபிஎஃப்ஓ போர்டல்
- உமங் செயலி

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 52% ஊதிய உயர்வு, குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... அறிவிப்பு எப்போது?

Missed Call: மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

EPF இருப்பைச் செக் செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று மிஸ்டு கால். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சமீபத்திய PF பங்களிப்பு மற்றும் இருப்பு விவரங்களுடன் EPFO ​​இலிருந்து SMS ஒன்றைப் பெறுவீர்கள்.

SMS: எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

EPF இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வசதியான வழி SMS ஆகும். இருப்பு விவரங்களைப் பெற, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று SMS அனுப்ப வேண்டும். 'ENG' என்பது மொழி விருப்பத்தை குறிக்கிறது (உதாரணமாக, ஆங்கிலம்). தமிழில் செய்தியை பெற  EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும். அதன் பிறகு, உங்கள் EPF கணக்குத் தகவலுடன் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.

EPFO Portal: இபிஎஃப்ஓ போர்டல் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

- இணையதளத்தைப் பயன்படுத்த விரும்புவோருக்கு, இருப்பைச் சரிபார்க்க EPFO ​​போர்டல் மற்றொரு எளிதான வழியாகும்.
-https://www.epfindia.gov.in என்ற இபிஎஃப் போர்டலுக்கு சென்று Employees பிரிவின் கீழ் Member Passbook என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் எண் (UAN) மற்றும் கடவுச்சொல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும். அதன் பின், பங்களிப்புகள் மற்றும் இருப்பு உள்ளிட்ட உங்கள் PF கணக்கு விவரங்களை இங்கே காணலாம்.

UMANG App: உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

UMANG செயலி, EPF இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வசதியான வழியாக உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் செயலியைப் பதிவிறக்கிய பிறகு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்து உங்கள் UAN ஐ இணைக்க வேண்டும். பதிவு செய்தவுடன், உங்கள் PF கணக்கு விவரங்கள், பங்களிப்புகள் மற்றும் பிற முக்கிய தகவல்களை எளிதாக அணுகலாம்.

மேலும் படிக்க | EPS: 30 வயதில் ரூ.25,000 சம்பளமா? அப்போ ஓய்வு காலத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News