EPFO சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு: பிஎஃப் வட்டித்தொகை...அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்!!
EPFO Interest Update: புது தில்லியில் நடைபெற்ற இபிஎஃப்ஓ -இன் மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், 2022-23 நிதியாண்டுக்கான EPFO-ன் ஆண்டு அறிக்கைக்கு வாரியம் ஒப்புதல் அளித்து, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்குப் பரிந்துரைத்தது.
EPFO Interest Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 2022-23 நிதியாண்டில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மொத்த வட்டி விகிதமாக 8.15 சதவீதத்தை வழங்குவதற்கு தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிக்கை அளித்துள்ளார். இதுமட்டுமின்றி மொத்தம் 24 கோடி கணக்குகளுக்கு 8.15 சதவீத வட்டித் தொகை கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப்ஒ வட்டி விகிதம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான திசையில் உள்ளதில் தனது அரசாங்கம் திருப்தி அடைவதாகவும் அவர் கூறினார்.
EPFO நிறுவன தினத்தில் மத்திய அமைச்சர் இந்த தகவல்களை வழங்கினார்
71 வது EPFO நிறுவன தினத்தில், மத்திய தொழிலாளர் அமைச்சர், வருங்கால வைப்பு நிதித் தொகையை சரியான நேரத்தில் மற்றும் சரியான வட்டியுடன் (EPF Interest) சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று வலியுறுத்தினார். 2022-23 ஆம் ஆண்டில் மொத்த வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு ரூ. 2.12 லட்சம் கோடி என்றும், அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2021-22-ல் இந்தத் தொகை ரூ. 1.69 லட்சம் கோடி என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
EPFO இன் மத்திய அறங்காவலர் குழு ஆண்டு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இபிஎஃப்ஓ -இன் மத்திய அறங்காவலர் குழுவின் 234 -வது கூட்டம் இந்த செவ்வாய் அன்று அதாவது அக்டோபர் 31 அன்று நடைபெற்றது. புது தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2022-23 நிதியாண்டுக்கான EPFO-ன் ஆண்டு அறிக்கைக்கு வாரியம் ஒப்புதல் அளித்து, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்குப் பரிந்துரைத்தது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆரம்பமே அதிரடி: 50%-51% டிஏ, எகிறும் சம்பளம்
இபிஎஃப்ஓ அறிக்கையில் இந்த எண்ணிக்கை வந்துள்ளது
- 2022-23 நிதியாண்டில் இபிஎஃப்ஓ -இன் மொத்த முதலீட்டு நிதி ரூ.21.36 லட்சம் கோடி, இதில் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டும் அடங்கும். கடந்த ஆண்டு அதாவது 2021-22 நிதியாண்டில் இந்த தொகை ரூ.18.3 லட்சம் கோடியாக இருந்தது.
- மொத்த முதலீட்டுத் தொகையைப் பார்த்தால், மார்ச் 31, 2023 அன்று இது ரூ.13.04 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23 நிதியாண்டில் மொத்தம் ரூ.2.03 லட்சம் கோடி அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
EPFO கணக்கு இருப்பை எவ்வாறு செக் செய்வது?
உறுப்பினர்கள் தங்கள் கணக்கு இருப்பை அதாவது பேலன்சை செக் செய்து அறிய இபிஎஃப்ஓ பல வழிகளை வழங்கியுள்ளது . இவற்றில் மிக எளிதான வழி, எஸ்எம்எஸ் அனுப்புவது. இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர் EPF இருப்பை (EPF Balance) அறிய, இபிஎஃப்ஓ இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்பலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS (EPFOHO UAN) அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் பதிலில், திரையில் கணக்கு விவரங்களைக் காணலாம். மிஸ்ட் கால் மூலமாகவும் உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை (UMANG App) பதிவிறக்கம் செய்தும், வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். மேலும் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு: EMI மிஸ் ஆனால் இனி அபராதம் கிடையாது, விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ