PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: முக்கிய விதிகளில் மாற்றம், அதிகரிக்கும் வசதிகள்
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது
EPFO Update: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. EPF விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது. அந்த வகையில், தற்போதும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) உதவும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Withdrawal Limit: பணம் எடுக்கும் வரம்பு
இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் எடுக்ககூடிய பணத்திற்கான வரம்பை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது PF உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இனி பிஎஃப் உறுப்பினர்கள், அவசர காலங்களில் PF கணக்கிலிருந்து அதிக பணத்தை எடுக்கலாம்.
இந்தத் தகவலை தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். திருமணம், மருத்துவ செலவுகள் அல்லது பிற அத்தியாவசிய செலவுகளுக்கு இபிஎஃப் கணக்கில் (EPF Account) இருந்து பணம் எடுக்க நினைப்பவர்களுக்கு இந்த மாற்றம் நிவாரணம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
பொதுவாக அவசர தேவைகள் ஏற்படும்போதுதான் மக்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகளுக்காக, வீடு கட்ட, திருமண செலவுகள் என வாழ்க்கையின் சில முக்கிய செலவுகளும் இதில் அடங்கும். இந்த தருணங்களில் பிஎஃப் உறுப்பினர்கள் இன்னும் அதிக தொகையை எடுக்க ஏதுவாக EPFO இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது இந்த தேவைகளுக்காக இபிஎஃப் தொகையை (EPF Amount) உறுப்பினர்கள் எளிதாக எடுக்கலாம். இந்த வரம்பு முன்னர் வெறும் ரூ.50,000 ஆக இருந்தது. ஆனால் இப்போது இது ஒரு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றொரு முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளது
ஒரு பணியளர் வேலைக்குச் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்குள் PF-ல் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது கிடைக்கும். முன்னர் இது சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால், தற்போது விதிகளில் மாற்றம் செய்யப்படுள்ளதால், இப்போது ஒருவர் பணியில் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்குள் தனது PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இந்த மாற்றம் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
EPF இல் இல்லாத சில நிறுவனங்கள்
EPF இல் இல்லாத சில நிறுவனங்களுக்காகவும் அரசாங்கம் மற்றொரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இப்போது EPF இல் இல்லாத சில நிறுவனங்கள், அரசு நடத்தும் இந்த ஓய்வூதிய நிதி திட்டத்தில் சேரலாம்.
EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்
அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPF ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இது பல ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்புக்கான முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தற்போது, இபிஎஃப் தொகைக்கு 8.25% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கின்றது.
PF Withdrawal: எந்தெந்த தேவைகளுக்காக பிஎஃப் தொகையை எடுக்கலாம்?
- இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பல வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
- பணி ஒய்வுக்கு பின்னர் இபிஎஃப் மற்றும் இபிஎஸ் தொகை கார்ப்பஸ் மற்றும் ஓய்வூதியமாக கிடைக்கின்றன.
- இது தவிர பணி ஓய்வுக்கு முன்னர் மருத்துவம் அல்லது பிற முக்கிய நோக்கங்களுக்காகவும் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கலாம்.
- மருத்துவம், திருமணம், கல்வி அல்லது பிற முக்கிய குடும்பத் தேவைகளுக்கு PF -இல் இருந்து பணத்தை எடுக்கலாம்.
- அவசரகால நிதியாக, PF கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகையின் வரம்பு தற்போது ரூ.50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ