ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தியாவில் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.  பல்வேறு துறைகளில் வேலை செய்யும் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியும், முதலாளியின் பங்களிப்பும் சேர்ந்து ஒவ்வொரு ஊழியரின் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஊழியர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய இந்த அமைப்பு செயல்படுகிறது. இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலையில் PF கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்!


EPF விதிகளின்படி, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12% இந்த கணக்கிற்கு கொடுக்க வேண்டும். பணியாளரின் PF கணக்கில் பொருந்தக்கூடிய தொகையை முதலாளி வழங்குகிறார். EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ஊழியர்களுக்கு வட்டி கிடைக்கும்.  பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் EPFல் உள்ள முழுத் தொகையையும் திரும்ப பெற்று கொள்ள முடியும். எனினும் EPFO கணக்கில் இருந்து எவ்வளவு பணத்தை ஒரே நேரத்தில் எடுக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. சில நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, EPF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணம் எடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


EPFO கணக்கில் எவ்வளவு பணத்தை எடுத்து கொள்ள முடியும்?


வீடு கட்ட அல்லது வாங்க: ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும் இருக்கும் லட்சியங்களில் ஒன்று சொந்தமாக ஒரு வீடு வாங்குவது ஆகும். EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வேலை செய்து இருந்தால் புதிய வீட்டைக் கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்காக PF பணத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை எடுத்து கொள்ள முடியும்.  


மருத்துவ அவசரநிலை: ஒவ்வொரு மாதமும் நாம் ஒரு செலவு நினைத்து இருந்தால், எதிர்பாராத விதமாக வரும் மருத்துவ செலவுகள் நம் கையை கட்டிப்போட்டு விடும். இந்நிலையில் EPFO கணக்கில் இருந்து மருத்துவ அவசரத் தேவைகளுக்காக பணத்தை எடுத்து கொள்ள முடியும். தனிநபர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து அவர்களின் மாத சம்பளத்தில் ஆறு மடங்கு வரை மருத்துவ தேவைகளுக்காக எடுத்து கொள்ள முடியும்.  


திருமணச் செலவுகள்: ஒரு திருமணத்தில் எதிர்பாராத அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வளவு தான் சிக்கனமாக திருமணம் செய்தாலும் திடீர் செலவுகளை சமாளிக்க முடியாது. இதனால் திருமண தேவைகளுக்காக PF கணக்கில் இருந்து பணத்தை பெற்று கொள்ள முடியும். EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பங்களிப்பில் 50 சதவீதத்தை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.


வேலையின்மை: 3 மாதங்கள் தொடர்ந்து ஒருவருக்கு வேலை இல்லை என்றால் PF கணக்கில் இருக்கும் பணத்தை பணியாளரால் எடுத்து கொள்ள முடியும்.  ஒருவர் இந்த சமயத்தில் தனது பிஎஃப் நிதியில் 75 சதவீதம் வரை எடுக்கலாம். 


ஓய்வு: ஊழியர் அவரது 58 வயதை எட்டியதும், அவரால் தனது முழு PF பணத்தையும் திரும்பப் பெறத் தகுதி பெறுகிறார். EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு பரிவர்த்தனையில் 90 சதவிகிதம் வரை பணத்தை எடுத்து கொள்ள முடியும்.  ஊழியர்களுக்கு அவசர காலங்களில் நிதி உதவி வழங்குவதற்கும் நீண்ட கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் EPFO ஆனது செயல்படுகிறது.  தேவையில்லாமல் பணத்தை வீணடிப்பதை தடுக்க EPFO இவ்வாறு விதிகளை அமல்படுத்தி உள்ளது.  


மேலும் படிக்க | வீடு வாங்கும் கனவை சுலபமாக நனவாக்க சூப்பர் வழி! கூட்டு வீட்டுக் கடன் கொடுக்கும் நன்மைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ