EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. செயலற்ற கணக்குகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்க EPFO ​​புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் குறித்த புரிதலும் தெளிவும் அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் (EPF Members) இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, மோசடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பண பரிமாற்றத்தை தடுக்க,  செயலற்ற கணக்குகள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இதற்கான புதிய விதிகளை இபிஎஃப்ஓ அமல்படுத்தியுள்ளது. இவற்றை பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO புதிய விதிகள்


EPFO அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளின் கீழ், செயல்படாத கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


PF கணக்குகள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன


புதிய விதிகளின் கீழ் பிஎஃப் சந்தாதாரர்களின் (PF Subscribers) கணக்குகள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


- குறைந்த பரிவர்த்தனைகளை கொண்ட கணக்குகள்
- செயலற்ற கணக்குகள்


குறைந்த பரிவர்த்தனைகளை கொண்ட கணக்குகள்: ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிரெடிட் அல்லது டெபிட் (வட்டி தவிர) பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகள் 'பரிவர்த்தனை இல்லாத கணக்குகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.


செயலற்ற கணக்குகள்: EPF திட்டத்தின் கீழ் முன் வரையறுக்கப்பட்ட அளவுருக்களின் கீழ் வரும் கணக்குகள் 'செயலற்ற கணக்குகள்' என வகைப்படுத்தப்படும். 


இந்த இரண்டு வகையான கணக்குகளிலும், பணம் எடுக்க வேண்டுமானாலும். பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானாலும், பிஎஃப் உறுப்பினர்கள் வெரிஃபிகேஷன் ப்ராசஸ் அதாவது சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் அதை செய்ய வேண்டும். 


Account Verification: கணக்கை வெரிஃபை செய்வதற்கான செயல்முறைகள் என்ன?


EPFO மூலம் திருத்தப்பட்ட SOP இன் கீழ், செயலற்ற கணக்குகளை அன்பிளாக் செய்ய முழுமையான சரிபார்ப்பு செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய செயல்முறைகளின் கீழ், டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் பதிவுகளின் வெரிஃபிகேஷன் அதாவது சரிபார்ப்பு செய்யப்படும். இது மட்டுமின்றி, இதை செய்து முடிக்க நிறுவனங்களிடமிருந்து உறுதிப்படுத்தலும் தேவைப்படும். முன்பு செயலிழந்த கணக்குகளிலிருந்து செய்யப்பட்ட க்ளெய்ம்களின் கூடுதல் ஆய்வுகளும் இப்போது செய்யப்படும். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்


Universal Account Number: UAN -இல் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?


- EPFO கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி, அனைத்து செயலற்ற கணக்குகளும் யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணை (யுஏஎன்) உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
- எந்த உறுப்பினர்களின் செயலற்ற அல்லது செயல்படாத கணக்குகள் UAN உடன் இணைக்கப்படவில்லையோ, அவர்கள் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் செய்வதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் EPFO ​​அலுவலகங்கள் அல்லது சிறப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டும். 
- க்ளெய்ம் செய்பவர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதும் மோசடிகளைத் தடுப்பதும்தான் இந்த செயல்முறையின் நோக்கமாகும்.


KYC: இந்த புதிய செயல்முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன


உறுப்பினர்களின் UAN ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தாலும் சரியான KYC தகவல் இல்லை என்றால், அந்த பிஎஃப் உறுப்பினர்கள் KYC சீடிங் (KYC Seeding) செயல்முறையை செய்ய வேண்டும். இதை உறுப்பினர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக EPFO ​​அலுவலகங்களிலோ செய்து முடிக்கலாம். UAN உருவாக்கம் மற்றும் KYC புதுப்பிப்பு செயல்முறைகள் இப்போது கணக்கு இருப்பைப் பொறுத்தது. இந்த செயல்முறைகளுக்கு மூத்த அதிகாரிகளின் ஒப்புதலும் அவசியமாகும். 


மேலும் படிக்க | அதிரடி அப்டேட்களை அறிவித்த ரிசர்வ் வங்கி: UPI முதல் கடன் செயலிகள் வரை... பல மாற்றங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews