ஊழியர் ஓய்வூதியத் திட்டம்: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். இது தொடர்பான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களின் நிதி நிலையில் ஏற்படப்போகும் மாற்றங்களை பற்றியும் இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஸ் வரம்பு நீக்கம்


இபிஎஸ் வரம்பை நீக்குவது என்றால் என்ன? தற்போது, ​​அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.15,000 மட்டுமே உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-ல் மட்டுமே இருக்கும். இந்த வரம்பை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


மேலும் படிக்க | SBI ATM: பணம் எடுப்பதற்கான கட்டணங்களில் மாற்றம், முழு விவரம் இதோ 


இப்போது இபிஎஸ் தொடர்பான விதிகள் என்ன?


நாம் ஒரு வேலையைத் தொடங்கி இபிஎஃப்- இல் உறுப்பினராகும்போது, ​​அதே நேரத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகிறோம். ஊழியர் தனது சம்பளத்தில் 12% இபிஎஃப் இல் கொடுக்கிறார். அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. ஆனால் அதில் ஒரு பகுதி 8.33 சதவிகிதம் இபிஎஸ்-க்கும் செல்கிறது. 


மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போது அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் ஆக மட்டுமே உள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பங்கு அதிகபட்சம் (15,000 இல் 8.33%) ரூ 1250 ஆகும். ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக கருதப்படுகிறது. இதன்படி, இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.


இப்படித்தான் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது


நீங்கள் செப்டம்பர் 1, 2014க்கு முன் இபிஎஸ்ஸில் பங்களிக்கத் தொடங்கியிருந்தால், உங்களுக்கான ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள் இபிஎஸ்-இல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ஆக இருக்கும். இப்போது ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை காணலாம். 


இபிஎஸ் கணக்கீட்டு சூத்திரம்


- மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x இபிஎஸ் பங்களிப்பு வருடங்கள் )/70


- செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஊழியர் இபிஎஸ்-க்கு பங்களிக்கத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொண்டால், ஓய்வூதிய பங்களிப்பு 15,000 ரூபாயாக இருக்கும். 


- அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்று வைத்துக்கொள்வோம்.


- மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/70 = ரூ 6428


அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம்


இன்னும் ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பணியாளரின் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை 1 வருடமாகக் கருதப்படும். இதைவிட குறைவாக இருந்தால் அது கணக்கிடப்படாது. அதாவது, பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். ஆனால் நீங்கள் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வேலை செய்திருந்தால், 14 ஆண்டுகள் என்று மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இபிஎஸ்-இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாய், அதிகபட்ச ஓய்வூதியம் 7500 ரூபாய் ஆகும்.


ரூ. 8,571 ஓய்வூதியம் கிடைக்கும்


15 ஆயிரம் என்ற வரம்பு நீக்கப்பட்டு, அடிப்படைச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால், பார்முலாவின்படி உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் இப்படி இருக்கும். 


- (20,000 X 30)/70 = ரூ 8,571.


ஓய்வூதியத்திற்கான தற்போதைய நிபந்தனைகள் (இபிஎஸ்)


- ஓய்வூதியத்திற்கு இபிஎஃப் உறுப்பினராக இருப்பது அவசியம்.


- குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயமாகும்.


- பணியாளருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும்.


- 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பும் ஓய்வூதியம் பெற வசதி உள்ளது.


- முதல் ஓய்வூதியத்தில், நீங்கள் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்காக நீங்கள் படிவம் 10D ஐ நிரப்ப வேண்டும்.


- ஊழியர் இறந்தால், குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.


- சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி கிடைக்கும்.


மேலும் படிக்க | Mutual Fund: முதலீட்டை துவங்குவது எப்படி, எந்த ஆவணங்கள் தேவை, முழு விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR