EPS Pension: PF உறுப்பினர்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. இவை உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரலாம். இபிஎஃப் உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கக்கூடும் என கூறப்படுகின்றது. புதிய இபிஎஃப் அப்டேட் என்ன? குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பு ரூ.7500 ஆக உயர உள்ளதா? முழு விவரங்களையும் இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலாளர் அமைச்சகத்திற்கு நோட்டீஸ்


குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் தேசிய போராட்டக் குழு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது. அந்த குழு, தொழிலாளர் அமைச்சகத்திற்கு, இதற்காக 15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளது.


நாடு தழுவிய அளவில் போராட்டம்


ஓய்வூதியம் தொடர்பான இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அக்குழு தெரிவித்துள்ளது. EPS-95 ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் கீழ், ஆறு கோடிக்கும் அதிகமான பங்குதாரர்களும், 75 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பணியாளர் ஓய்வூதியத் திட்ட போராட்டக் குழு எழுதியுள்ள கடிதத்தில், ஊழியர் ஓய்வூதியத் திட்ட ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இதுமட்டுமின்றி இவர்களுக்கான மருத்துவ வசதிகளும் குறைவாகவே உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதியத்தின் குறைந்தபட்ச தொகையை 15 நாட்களுக்குள் உயர்த்தி அறிவிக்காவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என ஊழியர் ஓய்வூதியத் திட்டக் குழு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் கீழ், ரயில் மற்றும் சாலை போக்குவரத்தின் நிறுத்தம், வெகுஜன உண்ணாவிரதப் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.


குறைந்தபட்ச இபிஎஸ்-95 ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று குழு கோரியுள்ளது. இதனுடன், அக்டோபர் 4, 2016 மற்றும் நவம்பர் 4, 2022 இன் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளின்படி உண்மையான சம்பளத்தில் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியத்தை வழங்கவும் குழு கோரியுள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு


Minimum Monthly Pension


EPS-95 இன் பயனாளிகளில் சுமார் 75 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மேலும், 6 கோடிக்கும் அதிகமான பங்குதாரர்கள் இதில் அடங்குவர். இந்த திட்டம் பணியாளர் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO ​​ஆல் இயக்கப்படுகிறது. இந்த ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும். இதனுடன் மேலும் பல வகையான வசதிகளும் இதன் மூலம் கிடைக்கின்றன. 


Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:
- EPS -இல் 58 வயதில் ஓய்வு பெறும்போது உறுப்பினர் ஓய்வூதியம் கிடைக்கும்.
- வேலையின்மை ஏற்பட்டால் 50 வயதுக்கு முன் உறுப்பினர் ஓய்வூதியம் கிடைக்கும்.
- சேவையின் போது உறுப்பினருக்கு சிறிய அளவு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் கிடைக்கும்.
- இபிஎஃப் உறுப்பினர் (EPF Members) அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் மரணம் ஏற்பட்டால், உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு விதவை ஓய்வூதியம் கிடைக்கும்.
- உறுப்பினர்/ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் 25 வயது வரை அவரது 2 குழந்தைகளுக்கு குழந்தை ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஊனமுற்ற குழந்தை/அனாதைகளின் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற குழந்தை/அனாதை ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி உறுப்பினரின் மரணம் ஏற்பட்டு, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டால், உறுப்பினரால் முறையாக பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- உறுப்பினருக்கு குடும்பம் அல்லது நாமினி இல்லை என்றால், உறுப்பினரின் மரணத்திற்கு பிறகு, சார்ந்திருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ஓய்வூதியம் கிடைக்கும்.


EPS -இல் உறுப்பினராக சேர என்ன செய்ய வேண்டும்?


நீங்கள் இந்த EPS-95 திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் EPFO ​​சந்தாதாரராக இருக்க வேண்டும். மாதா மாதம் EPFO ​​சந்தாதாரரும் அதாவது உறுப்பினரும் அவரது நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் (EPF ACcount) ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனத்தின் பங்கில் 8.33 சதவீதம் ஓய்வூதிய நிதிக்கு செல்கிறது.


மேலும் படிக்க | EPF Claim தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறதா? இதுதான் காரணம்.... எளிதில் சரி செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ