EPF Claim Rejection: தனியார் வேலைகளில் பணிபுரியும் நபர்கள் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் இயங்கும் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக பார்க்கப்படுகின்றது. எனினும், ஊழியர்கள் பணி ஓய்வுக்கு முன்னரும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இந்த தொகையை எடுக்கலாம்.
இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) டெபாசிட் செய்யப்பட்ட தொகையை சில நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்தலாம். EPFO, சந்தாதாரர்கள் (ஊழியர்கள்) சில சூழ்நிலைகளில் EPF இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. பொதுவாக, பணத்திற்காக விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் ஊழியரின் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.
எனினும், இபிஎஃப் தொகைக்காக (EPF Amount) பிஎஃப் உறுப்பினர்கள் தொகையை க்ளெய்ம் செய்யும் விண்ணப்பங்கள் சில சமயம் நிராகரிக்கப்படுகின்றன. EPFO விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் YouTube -இல் வெளியிட்டுள்ளது.
க்ளெய்ம் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது ஏன்?
க்ளெய்ம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. அவசியமான பணத்தேவை இருக்கும்போதுதான் உறுப்பினர்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடிவு செய்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நிச்சயம் அதிர்ச்சி ஏற்படும். ஆகையால், விண்ணப்பிக்கும் முன், க்ளெய்ம் ஏன் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு EPFO கொடுத்த காரணங்களை ஊழியர்கள் கவனித்து செயல்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும்.
க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கு EPFO பின்வரும் காரணங்களைக் கூறியுள்ளது
முழுமையற்ற மற்றும் தவறான KYC
இபிஎஃப் சந்தாதாரர் சரியான KYC வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவரது யுனிவர்சல் அக்கவுண்ட் எண் (UAN) அவரது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்வது அவசியம். இதுமட்டுமின்றி உறுப்பினர்களின் மொபைல் எண் மற்றும் முகவரியும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த நிவாரணம்
தவறான தனிப்பட்ட தகவல்
சந்தாதாரரின் பெயர், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு, தந்தையின் பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் EPFO இன் பதிவுகளுடன் ஒத்திசைந்து இருப்பது மிக அவசியமாகும்.
தவறான வங்கிக் கணக்குத் தகவல்
விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தங்களது வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை சந்தாதாரர் இருமுறை சரிபார்க்க வேண்டும். வங்கிக் கணக்கு எண், IFC குறியீடு மற்றும் கிளை விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
முழுமையற்ற ஆவணங்கள்
இபிஎஃப் சந்தாதாரர் க்ளெய்ம் விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். அடையாளச் சான்று, முகவரிச் சான்று போன்றவற்றுக்கான ஆவணங்கள் இதில் அடங்கும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பது அவசியம்.
இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் முன் மேற்கூறிய விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், க்ளெய்ம் நிராகரிக்கபடுவதை தவிர்க்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ