அமேசான் வேலையை விட்டுவிட்டு 4 கோடி ரூபாய் தொழிலை உருவாக்கிய தமிழக இளைஞர்
அமேசானில் நல்ல வேலையில் இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக SR Group Stays என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, அதில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார் ராம் பிரகாஷ்.
கொரோனா காலத்தில் தான் நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. அந்த கடினமான நேரத்தில் எல்லோரும் சிக்கல்களை எதிர்கொண்டபோது, இனி இப்படியொரு சிக்கலை சந்திக்கக்கூடாது என்று யோசித்தவர்களில் ராம்பிரகாஷூம் ஒருவர். அதனால், 2020 ஆம் ஆண்டு எஸ்ஆர் குரூப் ஸ்டேஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறையில் செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.
இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை ஹோம் ஸ்டேகள் என்ற கருத்தை புரட்சிகரமாக்கி, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையை மறுவரையறை செய்யும் ஒரு செழிப்பான வணிக முயற்சியாக உருவெடுத்துள்ளது. எஸ்ஆர் குரூப்ஸ் ஸ்டேஸ் நிறுவனத்தை தொடங்கிய ராம்பிரகாஷ் செந்தில்நாதன், எஸ்ஆர்எம்மில் பி.டெக் முடித்தார். அதன் பிறகு, அமேசான் நிறுவனத்தில் எல்லோரையும்போல் ஒரு கார்ப்பரேட் ஊழியராக பணியில் சேர்ந்தார். இருப்பினும், விதி வேறு திட்டத்தைக் கொண்டிருந்தது. அவர் வேலையில் இருந்து விலகினார்.
மேலும் படிக்க | எம்பிஏ படித்தாலும் காய்கறி விற்பனை மூலம் ரூ. 50 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்
இனி வேறொரு கம்பெனியில் சேர்ந்து வேலை செய்வதை விடுத்து தானே ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று கருதினார். அவருக்கு ரியல் எஸ்டேட்டில் ஈடுபாடு இருந்தது. அதனால் அந்த துறையில் ஏதாவது ஒரு புதுமையான முயற்சியை எடுத்து அதில் சாதிக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி, தன்னுடைய சொந்த வீட்டை வாடகைக்கு விட்டார். அங்கிருந்து தான் எஸ்ஆர் குரூப் ஸ்டேஸ் பிறந்தது. சுற்றுலா தளங்களில் இருக்கும் மற்ற சொத்து உரிமையாளர்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தினார்.
ஒரு இடத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கிருக்கும் வாடகை வீட்டை தேர்ந்தெடுத்து குறுகிய காலம் தங்கிக் கொள்ளலாம். இதனை Airbnb சேவை என்று கூறுவார்கள். போட்டி இருந்தாலும், SR குரூப்ஸ் இதில் தனித்து நிற்பதற்கு காரணம் உரிமையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நல்லுறவை பேணிக் காக்கின்றனர். விருந்தினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதுடன், சொத்து உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்க வாடகை வருமானத்தை பெறவும் உதவியாக உள்ளனர்.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுவரை வெற்றிகரமான பதையில் செல்வதாக கூறப்பட்டுள்ளது. 30 ஊழியர்களுடன் செயல்படும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராம்பிரகாஷ் செந்தில் நாதனுக்கு தமிழ்நாட்டின் ஆறு வெவ்வேறு இடங்களில் 14 சொத்துக்கள் உள்ளன. இப்போது இந்த ஸ்டார்ட்அப் மொத்த வருவாய் ரூ. 4 கோடியை எட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், SR குரூப்ஸ் ஸ்டேஸ் இந்த வளர்ச்சியை இயற்கையாகவே அடைந்துள்ளது. வெளிநாட்டு பயணிகளின் பிரதான தேர்வாகவும் இந்த நிறுவனம் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க... இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ