வீட்டுக் கடன், வாகன கடன் EMI குறைய வாய்ப்பு உள்ளதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!
சொந்த வீட்டு கனவை நினைவாக்க சாமானியர்களுக்கு கை கொடுப்பது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால், அவர்களின் இஎம்ஐ பழு குறைந்து, சிறிது நிம்மதி பெருமூச்சு விடலாம்.
நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவான வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்றவற்றை நிறைவேற்ற பெரிதும் உதவுவது வங்கிகள் கொடுக்கும் குறைந்த வட்டியில் ஆன கடன்கள் தான். சொந்த வீட்டு கனவை நினைவாக்க சாமானியர்களுக்கு கை கொடுப்பது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால், அவர்களின் இஎம்ஐ பழு குறைந்து, சிறிது நிம்மதி பெருமூச்சு விடலாம். இந்நிலையில், வீட்டுக் கடன், வாகன கடன் வட்டி விகிதம் ஆகியவை, குறையும் வாய்ப்பு உள்ளது என்று சந்தை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இருட்டு அறிவிப்பில், எப்போ விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்தது. கடந்த ஒரு வருடமாக ரிப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 பிப்ரவரி மாதத்திற்கு இடையில் ஆன காலகட்டத்தில், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நாணய கொள்கை விகிதம் 250 பிபிஎஸ் அதிகரித்த நிலையில், வீட்டுக் கடன், வாகன கடன் உட்பட பலவகை கடன்களுக்கான, பட்டணங்கள் உயர்ந்தன. இதை எடுத்து வாடிக்கையாளர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கடனுக்கான இஎம்ஐ சுமை குறைய தொடங்கும்
எப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2025 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை குறைக்கும் என்றும், அதன் பிறகு ஆண்டு இறுதிக்குள் கடனுக்கான இஎம்ஐ சுமை குறைய தொடங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய, ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போதைய 6.5% வட்டி விகிதம் வரும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என்று ஆர்பிஐ மேலும் தெரிவித்துள்ளது.
சில்லறை பணவீக்கம் அளவு
ஜனவரி மாதத்திற்கான சில்லறை பணவிக்க விகிதம், ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 5.1% குறைந்துள்ளது. முக்கிய பணவீக்கம் 3.5 சதவிகிதமாக உள்ளது. காய்கறிகளின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டதும், அதைத்தொடர்ந்து, பருப்பு வகைகள் எண்ணெய்கள், பழங்கள் மசாலா ஆகியவற்றின் விளையும் குறைந்தன. சர்வதேச அளவில், போர், பொருளாதாரம் அந்த நிலை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என பல பிரச்சனைகள் இருந்த போதிலும், இந்தியாவின் பணவீக்கம் குறைந்து வருகிறது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, 2025 ஆம் ஆண்டில், 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட ஆர்பிஐ கவர்னர், 24 ஆம் ஆண்டில், வர்த்தகம் நல்ல நிலையில் இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு
கடந்த ஜனவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு, 591 மில்லியன் டாலர் அதிகரித்து, 616.73 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ