PM Kisan Maandhan Yojana: இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா போன்ற பல திட்டங்களை வழங்கி வருகிறது.  விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் ரூ.2000 என மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் மொத்தமாக ரூ.6000 வழங்கப்படுகிறது.  நாட்டிலுள்ள பல விவசாயிகளின் முதுமைக் கால பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா (PMKMY) திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு உதவுகிறது.  சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (எஸ்எம்எஃப்) சமூக பாதுகாப்பு மற்றும் முதியோர் பாதுகாப்பு வழங்குவதற்காக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?


 


மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள், 2 ஹெக்டேர் வரை பயிரிடக்கூடிய நிலம் வைத்திருக்கும் மற்றும் 18 முதல் 40 வரை உள்ளவர்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிலப் பதிவேடுகளில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் போன்ற அனைவரும் இணைந்து பயன் பெறலாம்.  60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய விவசாயிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படுகிறது.  ஒரு விவசாயி இறந்தால் அந்த விவசாயியின் மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  18 முதல் 40 வயதிற்குட்பட்ட பதிவுதாரர்கள் ரூ. 55 முதல் ரூ. 200 வரையிலான மாதாந்திர பங்களிப்புகளைச் செய்ய வேண்டும்.  இந்த திட்டத்தில் சேரும் நபர்கள் 60 வயதை அடைந்ததும் அவர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம், இதனை செய்த பிறகு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஓய்வூதியத் தொகை அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.



பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தில் இதுவரை 1,92,5,369 விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர்.  தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத் திட்டம் அல்லது ஊழியர்களின் நிதி அமைப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் வராத சிறு விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.  பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி மன்தன் ஆகியவற்றில் இணைந்த விவசாயிகள் PMKMY திட்டத்தில் சேர தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.


மேலும் படிக்க | புதிய எஃப்டி திட்டத்தை அறிமுகம் செய்தது SBI: இதில் கிடைக்கும் அதிக வட்டி


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ