புதிய எஃப்டி திட்டத்தை அறிமுகம் செய்தது SBI: இதில் கிடைக்கும் அதிக வட்டி

SBI Amrit Kalash Deposit Scheme: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதிக வட்டி விகிதங்களுடன் புதிய சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2023, 01:58 PM IST
  • பாரத ஸ்டேட் வங்கியின் புதிய 400 நாட்கள் எஃப்டி உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
  • இந்த புதிய டெபாசிட் திட்டம் பிப்ரவரி 15, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும்.
  • அம்ரித் கலஷ் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் மற்றவர்களுக்கு 7.1 சதவீதமும் வட்டி விகிதத்தையும் வழங்கும்.
புதிய எஃப்டி திட்டத்தை அறிமுகம் செய்தது SBI: இதில் கிடைக்கும் அதிக வட்டி title=

எஸ்பிஐ அம்ரித் கலஷ் வைப்புத் திட்டம்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி!! இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் நிலையான வைப்பு (எஃப்டி திட்டம்) விகிதங்களை 25 பிபிஎஸ் உயர்த்திய பிறகு, அதிக வட்டி விகிதங்களுடன் புதிய சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் பொது வகை முதலீட்டாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் கிடைக்கும். இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். இது அடுத்த மாதம் முடிவடையும்.

எஸ்பிஐ புதிய எஃப்டி திட்டம் - அம்ரித் கலஷ் வைப்பு

“கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், 400 நாட்களுக்கான திட்டக்காலம் மற்றும் பலவற்றுடன் உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு "அம்ரித் கலாஷ் வைப்புத்தொகை" அறிமுகப்படுத்தப்படுகிறது" என்று வங்கி ட்வீட் செய்தது.

மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?x

யாருக்கு கிடைக்கும்?

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய 400 நாட்கள் எஃப்டி உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

செல்லுபடி காலம்

இந்த புதிய டெபாசிட் திட்டம் பிப்ரவரி 15, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும்.

வட்டி விகிதம்

அம்ரித் கலஷ் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் மற்றவர்களுக்கு 7.1 சதவீதமும் வட்டி விகிதத்தையும் வழங்கும்.

டெபாசிட் காலம்

புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் 400 நாட்களுக்கானது.

வட்டி செலுத்தல்

சிறப்பு நிலையான வைப்பு - முதிர்வு காலத்தில்

டிடிஎஸ்

வருமான வரிச் சட்டத்தின்படி டிடிஎஸ் பொருந்தும்.

முன்கூட்டியே எடுக்கலாம்

புதிய அமிர்த கலஷ் வைப்புகளில் முன்கூட்டியே தொகையை எடுக்கும் வசதியும் கடன் வசதியும் கிடைக்கும்

எஸ்பிஐ எஃப்டி விகிதங்களை அதிகரித்துள்ளது

- எஸ்பிஐ குறிப்பிட்ட காலத்திற்கு 2 கோடிக்கும் குறைவான சில்லறை உள்நாட்டு நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு, பொது மக்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

- பொது மக்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு 25 பிபிஎஸ் உயர்த்தப்பட்டுள்ளது.

- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு, எஸ்பிஐ பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக 25 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது.

- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு, வங்கி எஃப்டி விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக 25 பிபிஎஸ் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News