FASTag KYC Update Deadline Extended : ஃபாஸ்டேக் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? அப்படி இல்லை என்றால், கவலை வேண்டாம்.. தற்போது இதற்கான காலக்கெடுவை மீண்டம் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக இருந்த நிலையில், தற்போது மார்ச் 31 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag -க்கான KYC ஐ செய்து முடிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நீடித்துள்ளது. போதுமான இருப்பு அதாவது பேலன்ஸ் இருந்தும், KYC முழுமையாகாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகள் மூலம் செயலிழக்கப்படும் என NHAI தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது, பின்னர் இந்த காலக்கடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31 ஆக எக்ஸ்டெண்ட் செய்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


Fastag KYC Last Date Update Online: Paytm பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?


பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank Ltd - PPBL) இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை மற்ற வங்கிகளுக்கு மாற்றுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகும், வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபிலிட்டி கார்டுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவும் பயன்படுத்தவும் PPBL வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆர்பிஐ (RBI) கூறியுள்ளது. 


மேலும் படிக்க | பெண்களை தொழில் முனைவோராக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா?


இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (Indian Highways Management Company Limited) IHMCL தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான படிப்படியான வழிமுறையை இங்கெ காணலாம்: 


* IHMCL வாடிக்கையாளர் போர்ட்டலுக்கு செல்லவும் அல்லது https://ihmcl.co.in/ என்ற இணியப்பை கிளிக் செய்யவும். 
* உங்காள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது OTP ஐப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். 
* "My Profile" பிரிவிற்கு சென்று "KYC" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
* வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சரியான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.


ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான வழிமுறை: 
* NPCI (National Payments Corporation of India) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அல்லது https://www.npci.org.in/what-we-do/netc-fastag/product-overview என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
* உங்களுக்கு FASTag வழங்கிய வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் வங்கியின் FASTag போர்ட்டலில் லாக் இன் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி மற்றும் சில வங்கிகள் ஃபாஸ்டேக்கை வெளியிட்டுள்ளன.


ஆஃப்லைனில் FASTag KYC புதுப்பிப்பதற்கான வழிமுறை: 
உங்கள் FASTag -ஐ வழங்கிய வங்கியின் கிளைக்கு செல்லவும். அங்கு சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உங்கள் FASTag கணக்கிற்கான KYC -ஐ புதுப்பிக்கக் கோரவும்.


Fastag KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது MNREGA வேலை அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்று. FASTag உடன் இணைக்கப்பட்ட வாகனத்தின் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC).


FASTag வாடிக்கையாளர் சேவை எண்:
FASTag KYC தொடர்பாக எதேனும் குழப்பம் இருந்தால், 1800 3006 9090 / 1860 266 6888 ஆகிய எண்கலில் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க | மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ தொழில்களை செய்யுங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ