பெண்களை தொழில் முனைவோராக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா?

பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில் `லக்பதி தீதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

 

1 /8

மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு திட்டம் தான் `லக்பதி தீதி திட்டம்.   

2 /8

இந்தத் திட்டம் பெண்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி, தொழில்முனைவோராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர பான் கார்டு, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும்.  

3 /8

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் தங்கள் கிராமங்களில் குறுந்தொழில்களை அமைத்து ரூ. 1 லட்சம் நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகாட்டல்ள் கிடைக்கும்.  

4 /8

எல்இடி பல்புகள் தயாரித்தல், பிளம்பிங் செய்தல், ஆளில்லா விமானம் பழுது பார்த்தல் போன்ற தொழில்நுட்பத் திறன்கள் பெண்களுக்கு கற்பிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் பல்வேறு சுயஉதவி குழுக்களில் சேரலாம்.   

5 /8

சுமார் 15000 மகளிர் சுய உதவி பெண்கள் ட்ரோன் இயக்கம் மற்றும் பழுதுபார்க்கவும் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. ட்ரோன் நீர்ப்பாசனம், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதுடன் துல்லியமான விவசாய பயிர் கண்காணிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்துகிறது.  

6 /8

மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தாலே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவார்கள்.  

7 /8

அதன்பின், லக்பதி திதி யோஜனாவுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும். அனைத்து தகவல்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். பின்னர் விண்ணப்பப் படிவத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட அலுவலகத்திலோ அல்லது அங்கன்வாடி மையத்திலோ சமர்ப்பிக்கவும்.  

8 /8

விண்ணப்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். திட்டத்தின் தகவல்தொடர்பு செயல்முறையின்படி இது கடிதம், SMS அல்லது மின்னஞ்சல் மூலமாக இருக்கலாம். பின்னர் பயிற்சி திட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதன்பிறகு, லக்பதி திதி யோஜனா நிதி உதவியை பெறலாம்.