FASTag Deadline: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? ஆன்லைன், ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

FASTag KYC Update Last Date Feb 29 Today Deadline: 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது. எனினும், பின்னர் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 04:22 PM IST
  • Fastag KYC Last Date Update: காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படுமா?
  • Paytm பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?
  • ஆஃப்லைனில் FASTag KYC புதுப்பிப்பதற்கான வழிமுறை.
FASTag Deadline: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? ஆன்லைன், ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

FASTag KYC Update Last Date Feb 29 Today Deadline: ஃபாஸ்டேக் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? அப்படி இல்லை என்றால், உடனடியாக இதை செய்து முடிக்க வேண்டியது மிக அவசியம். இல்லையென்றால், பல சிக்கல்களை நீங்கள் எதிகொள்ள நேரிடலாம். இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag -க்கான KYC ஐ செய்து முடிக்க கடைசி தேதி பிப்ரவரி 29, அதாவது இன்று என ஏற்கனவே அறிவித்துள்ளது. போதுமான இருப்பு அதாவது பேலன்ஸ் இருந்தும், KYC முழுமையாகாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகள் மூலம் செயலிழக்கப்படும் என NHAI தெரிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

முன்னதாக, 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது. எனினும், பின்னர் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது. எனினும், இன்று வாரையிலும் கூட இதை செய்து முடிக்காத பலர் உள்ளனர்.

Fastag KYC Last Date Update: காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படுமா?

NHAI ஆனது 'ஒரு வாகனம், ஒரு FASTag' ('One Vehicle, One FASTag') முன்முயற்சியின் இணக்க காலக்கெடுவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு பிடிஐ அறிக்கை தெரிவிக்கின்றது. Paytm FASTag பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை NHAI எடுக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Fastag KYC Last Date Update Online: Paytm பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank Ltd - PPBL) இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை மற்ற வங்கிகளுக்கு மாற்றுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 15-ஆம் தேதிக்குப் பிறகும், வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபிலிட்டி கார்டுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவும் பயன்படுத்தவும்  PPBL வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆர்பிஐ (RBI) கூறியுள்ளது. 

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (Indian Highways Management Company Limited) IHMCL தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான படிப்படியான வழிமுறையை இங்கெ காணலாம்: 

ஸ்டெப் 1: IHMCL வாடிக்கையாளர் போர்ட்டலுக்கு செல்லவும் அல்லது  https://ihmcl.co.in/ என்ற இணியப்பை கிளிக் செய்யவும். 

ஸ்டெப் 2: உங்காள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது OTP ஐப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். 

ஸ்ரெப் 3: "My Profile" பிரிவிற்கு சென்று "KYC" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

ஸ்டெப் 4: வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சரியான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

உங்கள் வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் FASTag KYC ஐப் புதுப்பிப்பதற்கான வழிமுறை: 

ஸ்டெப் 1: NPCI (National Payments Corporation of India) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அல்லது https://www.npci.org.in/what-we-do/netc-fastag/product-overview என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

ஸ்பெட் 2: உங்களுக்கு FASTag வழங்கிய வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: உங்கள் வங்கியின் FASTag போர்ட்டலில் லாக் இன் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி மற்றும் சில வங்கிகள் ஃபாஸ்டேக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க | சுலபமாக கோடீஸ்வரராக்கும் PPF திட்டம்: தினமும் ரூ.405 சேமித்தால் போதும்

ஆஃப்லைனில் FASTag KYC புதுப்பிப்பதற்கான வழிமுறை: 

ஸ்டெப் 1: உங்கள் FASTag -ஐ வழங்கிய வங்கியின் கிளைக்கு செல்லவும். 

ஸ்டெப் 2: தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உங்கள் FASTag கணக்கிற்கான KYC -ஐ புதுப்பிக்கக் கோரவும்.

Fastag KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் (Documents needed for Fastag KYC Update)

- பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது MNREGA வேலை அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்று.

- FASTag உடன் இணைக்கப்பட்ட வாகனத்தின் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC).

FASTag: வாடிக்கையாளர் சேவை (Fastag  Customer Care)

FASTag KYC அப்டேட் செய்யும்போது ஏதேனும் குழப்பம் அல்லது பிரச்சனை ஏற்பட்டால், பயனர்கள் FASTag வாடிக்கையாளர் சேவையை - 1800 3006 9090 / 1860 266 6888 ஆகிய எண்கலில் தொடர்பு கொள்ளலாம்.

FASTag என்றால் என்ன? (What is Fastag?)

FASTag என்பது NHAI ஆல் செயல்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வரும் மின்னணு கட்டண வசூல் அமைப்பாகும். இது ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கு மூலம் இது வாகன உரிமையாளர்களுக்கு நேரடியாக டோல் கட்டணங்களை செலுத்தலாம். 

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த விதிகளை மறந்துடாதீங்க... பிறகு சிக்கல்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News