பெரிய கார் நிறுவனங்களின் சின்னத்தனம்: மோசடி வழக்கில் சிக்கிய Volkswagon, Audi!!
உமிழ்வின் அளவை தவறாக சித்தரிக்க தங்கள் கார்களில் ஏமாற்று சாதனங்களை பொருத்தியதற்காக இந்தியாவில் வோக்ஸ்வாகன் மற்றும் ஆடிக்கு எதிரான முதல் எஃப்.ஐ.ஆர் நொய்டாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உமிழ்வின் (Emission) அளவை தவறாக சித்தரிக்க தங்கள் கார்களில் ஏமாற்று சாதனங்களை (Cheat Device) பொருத்தியதற்காக இந்தியாவில் (India) வோக்ஸ்வாகன் (Volkswagon) மற்றும் ஆடிக்கு (Audi) எதிரான முதல் எஃப்.ஐ.ஆர் (FIR) நொய்டாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வோக்ஸ்வாகன் மற்றும் ஆடியின் உயர் அதிகாரிகள் மற்றும் ஜெர்மனியில் உள்ள அவர்களின் தலைமையகங்களுக்கு எதிராக நொய்டாவைச் சேர்ந்த அனில்ஜித் சிங் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். ஆடி இந்தியாவின் (Audi India) பிராண்ட் இயக்குநர் ரஹில் அன்சாரி, ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் மற்றும் ஆடி ஏ.ஜி.யின் தலைவர் பிராம் ஷாட் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
IANS மதிப்பாய்வு செய்த எஃப்.ஐ.ஆர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி, மோசடி மற்றும் குற்றச் சதி ஆகியவற்றை மேற்கோளிட்டுள்ளது.
VW அதன் கார்களில் ஒரு ஏமாற்று சாதனத்தை நிறுவுவதாகக் கண்டறியப்பட்டது. இது இல்லாவிடில் இந்த கார்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் 10-40 மடங்கு உமிழ்வை வெளியிட்டன. இந்த குற்றச்சாட்டின் மூலம் உலகளாவிய உமிழ்வு ஊழல் (Emission Scam) பற்றி தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டியவர் தன் குற்றச்சாட்டில், 2018 ஆம் ஆண்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஏழு ஆடி கார்களை தான் வாங்கியதாகக் கூறியுள்ளார். டெலிவரி எடுக்கும் நேரத்தில், இந்தியாவிலும் கார்களில் ஏமாற்று சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என கேட்டுள்ளார். அதற்கு நிறுவனம் அவை பொருத்தப்படவில்லை என கூறியது. இந்தியாவில் உமிழ்வு நியமங்கள் அத்தனை கடுமையானவை அல்ல என்றும் இந்தியா வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதால் அந்த சாதனங்கள் இங்கு பொருத்தப்படுவது இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைட்ரஜன் ஆக்சைடுக்கான ஆடி கார்களின் உமிழ்வு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட 5-8 மடங்கு அதிகமாக இருப்பதை இந்தியாவில் அதிகாரிகள் கவனித்ததாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் VW மீது ரூ .500 கோடி அபராதம் விதித்த பின்னர்தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் குற்றம் சாட்டிய நபர் தன் புகாரில் கூறியுள்ளார். தான் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் ஏமாற்றப்படுள்ளதாகவும் அவர் உணர்ந்தார்.
ALSO READ: உயரும் டீசல் விலை, பெட்ரோல் விலையில் மாற்றமில்லை- இன்றைய (ஜூலை 17, 2020) நிலவரம்
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆவணங்கள் மற்றும் சாதனங்களில் மோசடி செய்து கார்தாரரை ஏமாற்றியதாகவும், தங்களுக்கு தவறான லாபங்களையும், புகார்தாரருக்கு தவறான இழப்புகளையும் ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிறுவன அதிகாரிகள் சந்தையை கைப்பற்ற தவறான பதிவுகளை செய்து, மோசடி செய்யும் நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்ட சதித்திட்டத்தின் கீழ் புகார்தாரரை ஏமாற்றியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றவாளிகள். மேலும் புகார்தாரரை தரமற்ற கார்களுக்காக கடினமாக சம்பாதித்த பணத்தை இழக்கச் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு அனுமதிகளை கோரிய ஆவணங்களும் போலியானவை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மூத்த அதிகாரி ஒருவர் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்தவர் கோரியுள்ளார்.