Kisan Rail: விவசாயிகளுக்கான முதல் AC சரக்கு ரயில் சேவை ஆகஸ்ட் 7 தொடங்குகிறது
2020 பட்ஜெட்டில் அறிவித்துள்ள படி, விவசாயிகளுக்கான முதல் AC சரக்கு ரயில் சேவை ஆக்ஸ்ட் 7ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி: விவாசாயிகள், விரைவில் கெட்டுப் போகக் கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில்வே தனது கிசான் ரயில் சேவைகளை ஆகஸ்ட் 7 முதல் தொடங்கும் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. காய்கறிகளையும் பழங்களையும் ஏற்றிக்கொண்டு செல்லும் ரயில் சேவை மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகாரில் உள்ள டானாபூர் இடையே இயக்கப்படும். இதன் பெட்டிகள் அனைத்தும் குளிரூட்டப்பட்டவை என்பது தான் இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு cold supply chain உருவாக்கும் முயற்சியாக, தனியாருடன் இணைந்து, கிசான் ரயில் சேவை வழங்கப்படும் என இந்த ஆண்டு தொடக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், ரயில்வே அமைச்சகம் விவசாயிகளுக்கான முதல் ஏசி சரக்கு ரயிலை தேவ்லாலியில் இருந்து தனபூர் வரை இயக்க உள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல் ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 31.45 மணி நேரத்தில் 1,519 கி.மீ தூரத்தை கடந்து, மறுநாள் மாலை 6.45 மணிக்கு டானாபூரை சென்றடையும்.
மத்திய ரயில்வே, பூசாவல் பிரிவு, என்பது வேளாண் துறை சார்ந்த பிரிவு ஆகும். நாசிக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், உட்பட விரைவில் கெட்டுப் போகக்கூடிய பிற வேளாண் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன.
இவை முக்கியமாக பாட்னா, அலகாபாத், கட்னி, சட்னா மற்றும் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன
கிசான் ரயில், இடையில் நாசிக் சாலை, மன்மத், ஜல்கான், பூசாவல், புர்ஹான்பூர், காண்ட்வா, இடர்சி, ஜபல்பூர், சட்னா, கட்னி, மணிக்பூர், பிரயாகராஜ் சியோகி, பண்டிட் தீன் தயாள் உபாதயாய நகர் மற்றும் பக்ஸரில் ஆகிய இடங்களில் நிற்கும் .
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முதல் ஏசி சரக்கு ரயிலை வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து துவக்கி வைப்பார்.
ALSO READ சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!
இதில் உள்ள சரக்கு பெட்டிகள் 17 டன் கொள்ளளவு கொண்டவை ஆகும். புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய ரயில்வேயில் ஒன்பது (09) குளிரூட்டப்பட்ட பார்சல் வேன்கள் உள்ளன. இந்த குளிரூட்டப்பட்ட பார்சல் வேன்கள் ரவுண்ட் ட்ரிப் அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுகின்றன,. இதில் சாதாரண் சரக்கு ரயிலை விட 1.5 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.