சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!

கொடிய கொரோனா வைரஸ் ஆட்டம் இன்னும் ஓய்தபாடில்லை. அதற்குள், மற்றோரு வைரஸ் சீனாவில் பரவி வருவதாக செய்திகள் வருகின்றன.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 6, 2020, 01:32 PM IST
சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில், ஒரு புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. 

தொற்று பாதிப்பு ஏற்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலின் உள்ளே லுகோசைட் அதாவது ரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், மற்றும்  ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறந்துள்ளதை கண்டறிந்தனர். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Tick-borne virus எனப்படும் இந்த வைரஸால் பரவும் ஒரு புதிய தொற்று நோயினால்,  சீனாவில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதுவரை 60 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது என சீனாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் Severe Fever with Thrombocytopenia Syndrome Bunyavirus அல்லது SFTSV  என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதாவது கடுமையான காய்ச்சலுடன், ரத்தத்தின்  வெள்ளை அணுக்கள் மற்றும் உயிரணுக்கள் மிகவும் குறைவாக உள்ள நிலை ஆகும். 

ALSO READ | தினமும் உணவில் வெங்காயம்..... சர்க்கரை நோய் சரியாகும்..!!!

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்க்சு மாகாணத்தில் 37 பேருக்கும், அன்ஹுயீ மாகாணத்தில் 23 பேருக்கும் இந்த தொற்று பரவியுள்ளதாக, சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

SFTS வைரஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல. 2011 ஆம் ஆண்டிலேயே சீனா வைரஸின் நோய்க்கிருமியை கண்டறிந்துள்ளது.

வைரஸ் வல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவி இருக்கலாம் என்றும் வைரஸ் மனிதர்கள் இடகிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.

ALSO READ | ரொம்ம்ப சோர்வா இருக்கீங்களா? இதை மொதல்ல செக் பண்ணுங்க…!!!

இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளின் இரத்தம் அல்லது சளி மூலமாக மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கல் கூறியுள்ளனர்.