ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ், இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், இனி அரசிடமிருந்து இலவச கேஸ் சிலிண்டரை பெறலாம். இம்முறை பண்டிகைக் காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டு புதுப்பிப்பு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், இனி அரசிடமிருந்து இலவச கேஸ் சிலிண்டரை நீங்கள் பெறலாம். இம்முறை பண்டிகைக் காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அரசு வசதியை யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
3 சிலிண்டர்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த வசதி உத்தரகண்ட் அரசாங்கத்தால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்களும் உத்தரகாண்டில் வசிப்பவராக இருந்தால், ரேஷன் கார்டு மூலம் ஒரு வருடத்தில் 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம்.
மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்
தகுதியான கார்டுதாரர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும்
2022-23 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று கேஸ் சிலிண்டர்களை நிரப்புவதற்கு ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்து இருந்தது. தகுதியுடைய அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே மாநில அரசின் இந்த வசதியின் பலனைப் பெறுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 3 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாகப் பெறுவதற்கான தகுதி-
>> பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும்.
>> மேலும் தகுதியுடைய பயனாளி அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
>> அந்த்யோதயா ரேஷன் கார்டை எரிவாயு இணைப்பு அட்டையுடன் இணைக்க வேண்டும்.
சிலிண்டர்கள் எப்போது கிடைக்கும்
ஏப்ரல் முதல் ஜூலை வரை கார்டுதாரர்களுக்கு முதல் சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. இது தவிர, இரண்டாவது சிலிண்டர் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது சிலிண்டர் டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் கிடைக்கும்.
அந்த்யோதயா நுகர்வோர் கேஸ் ஏஜென்சி மூலம் எரிவாயு இணைப்பு மேப்பிங் செய்யவில்லை என்றால் யாருக்கு பலன் கிடைக்காது . உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவால் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தில் மொத்தம் ரூ.55 கோடி சுமை அரசுக்கு ஏற்படும்.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ