மே 1ம் தேதி முதல் இந்த 4 விதிகளில் மாற்றம்! மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்!
மே 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விலை, வங்கிக் கணக்குக் கட்டணம் என பல திட்டங்களில் மாற்றங்கள் வர உள்ளது. இதனை மீறினால் சிலருக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
புதிய நிதியாண்டின் முதல் மாதம் முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் முதல் பல விதிகள் மாறப்போகிறது. இந்த மாற்றம் சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மே முதல் நாளில், எல்பிஜி சிலிண்டர் விலை முதல் வங்கிக் கணக்குக் கட்டணம் வரை பல விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. தனிப்பட்ட நிதி அல்லது வங்கி தொடர்பான சில மாற்றங்களும் வர உள்ளது. மே 1 முதல் பணம் தொடர்பான எந்த எந்த விதிகளில் மாற்றம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
யெஸ் வங்கி இருப்புத் தொகை
யெஸ் வங்கியின் பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையில் மாற்றங்கள் செய்துள்ளது. வங்கியின் இணையதளத்தின்படி, யெஸ் வங்கியின் ப்ரோ மேக்ஸ் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50,000 ஆகவும், இதனை பராமரிக்கவில்லை என்றால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். அதேசமயம், ப்ரோ பிளஸ், யெஸ் ரெஸ்பெக்ட் எஸ்ஏ மற்றும் யெஸ் எசென்ஸ் எஸ்ஏ கணக்குகளுக்கு, குறைந்தபட்ச சராசரி இருப்பு வரம்பு ரூ. 25,000 மற்றும் ரூ. 10,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் யெஸ் வங்கி அதன் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி இருப்புத் தொகை
யெஸ் வங்கியை போலவே ஐசிஐசிஐ வங்கியும் சேமிப்பு தொடர்பான விதிகளை மாற்றப் போகிறது. ஐசிஐசிஐ வங்கி பல்வேறு சேமிப்புக் கணக்குப் பரிவர்த்தனைகளுக்கான திருத்தப்பட்ட சேவைக் கட்டணங்களை மே 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு ஆண்டுக் கட்டணமாக ரூ.99 மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். மேலும் முதல் 25 பக்கங்கள் கொண்ட காசோலைக்கு எந்த கட்டணமும் வசூலிக்க படாது. அதன் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கு ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டும். IMPS பரிவர்த்தனை தொகை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.50 முதல் ரூ.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HDFC காலக்கெடு
HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தைத் மே 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு நிலையான வைப்புத் திட்டத்திற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதற்கான காலக்கெடு மே 10 ஆகும். இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 0.75% கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கிறது, இதன் மூலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அவர்கள் FD திட்டத்தில் 7.75% வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.5 கோடி வரை டெபாசிட் செய்யலாம்.
எரிவாயு விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைக்கின்றன. எனவே, மே மாதம் முதல் தேதி எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலைவாசி உயர்வு ஏற்பட்டால், அது பொதுமக்களின் பாக்கெட்டில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ