என்.பி.எஸ் ஓய்வூதிய கால்குலேட்டர்: முதுமைச் செலவுகளைப் பற்றிய கவலைகள் அனைவருக்கும் இருக்கும். முதுமைப் பருவம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், முதுமையில் உங்களுக்கு பணப் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், அதற்கு அனைவரும் முன்கூட்டியே திட்டமிடத் தொடங்க வேண்டும். ஒருவர் தனது பணியை தொடங்கும் நாளிலேயே ஓய்வுக்கான பணத்தையும் சேமிக்கத் தொடங்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு பணம் ஓய்வு பெறும்போது கிடைக்கும். இபிஎஃப் (EPF), என்பிஎஸ் (NPS), பங்குச் சந்தை, மியூசுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் போன்ற ஓய்வூதிய நிதிகளில் சேமிப்பதற்கு பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது


உங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாக்க, நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வேலையில் இருப்பவர்கள், தாங்கள் ஓய்வு பெறும்போது, ​​ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஒரு பெரிய தொகையைப் பெற வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அதற்கு ஆரம்பம் முதலே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இதன்மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதுமை பாதுகாப்பாக இருக்கும்.


என்பிஎஸ் திட்டம் என்றால் என்ன


நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது அரசு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஈக்விட்டி மற்றும் கடன் கருவிகள் (டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்) இரண்டையும் கொண்டுள்ளது. என்பிஎஸ்- க்கு அரசாங்கத்திடம் இருந்து உத்தரவாதம் கிடைக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அதிக மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற நீங்கள் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 


வருமான வரி விலக்கு கிடைக்கும்


என்பிஎஸ் ஓய்வூதியத் திட்டமானது பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) போன்ற அரசாங்கத் திட்டமாகும். இதில், அனைத்து முதலீட்டாளர்களும் முதிர்வுத் தொகையை சரியாகப் பயன்படுத்தி தனது மாதாந்திர ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கலாம். என்பிஎஸ் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். நீங்கள் என்பிஎஸ்- இல் முதலீடு செய்தால், 50,000 ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள் 


மாதம் 2 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்


என்பிஎஸ்- இல் 40 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 1.91 கோடி கிடைக்கும். இதற்குப் பிறகு, முதிர்வுத் தொகையின் முதலீட்டில் 2 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இதன் கீழ், சிஸ்டமிக் வித்டிராயல் பிளான் (எஸ்டபிள்யூபி) மூலம் ரூ. 1.43 லட்சம் மற்றும் ரூ.63,768 -க்கான மாதாந்திர வருவாயும் கிடைக்கும். இதில், முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை ஆண்டுத் தொகையில் இருந்து ரூ.63,768 மாத ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.


20 ஆண்டுகளில் மாத ஓய்வூதியம் ரூ.63,768


20 வருடங்கள் முதல் ஓய்வூதியம் வரை ஒவ்வொரு மாதமும் ரூ 5000 முதலீடு செய்தால், நீங்கள் 1.91 கோடி முதல் 1.27 கோடி வரை மொத்த முதிர்வுத் தொகையைப் பெறுவீர்கள். இதற்குப் பிறகு, ரூ.1.27 கோடியில் 6% வருமானமாக, ஒவ்வொரு மாதமும் ரூ.63,768 மாதாந்திர ஓய்வூதியமாக பெறலாம்.


என்.பி.எஸ்ஸில் இரண்டு வகைகள் உள்ளன


NPS இல் இரண்டு வகைகள் உள்ளன, NPS டயர் 1 மற்றும் NPS டயர் 2. டயர்-1ல் குறைந்தபட்ச முதலீடு ரூ.500, டயர்-2ல் ரூ.1000. இருப்பினும், முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.


என்பிஎஸ்-இல் மூன்று முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அதில் முதலீட்டாளர் தனது பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈக்விட்டி, கார்ப்பரேட் கடன் மற்றும் அரசுப் பத்திரங்கள் ஆகியவை 3 முதலீட்டு வழிகளாகும். பங்குகளில் அதிக தொகையை முதலீடு செய்தால், அதிக வருமானத்தையும் பெறலாம். எனினும், உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் பேசிய பின்னரே எந்த முதலீட்டையும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | கார் வாங்கணுமா? பண்டிகை காலத்தில் இந்த வங்கிகளில் மிக மலிவான கார் கடன் கிடைக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ