பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; மாதம் ₹50,000 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்!

தேசிய ஓய்வூதிய திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2022, 09:59 PM IST
  • NPS ஒரு நீண்ட கால முதலீடாகக் கருதப்படுகிறது.
  • NPS அடுக்கு 1 என்பது ஓய்வூதிய பலன்களுக்கானது.
  • ரூ.500 மட்டுமே செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; மாதம் ₹50,000 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்! title=

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கவே விரும்புகிறார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் உண்டு. ஆனால் தனியார் துறையில் இந்த வசதிகள் இல்லை.  தனியார் துறையில் பணிபுரிந்து வருபவர் என்றால், ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை திட்டமிட 'தேசிய ஓய்வூதியத் திட்டம் பெரிதும் உதவும்.

இந்தத் திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. முறையான வழிகாட்டுதலுடன் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.

NPS என்றால் என்ன?

தேசிய ஓய்வூதியத் திட்டம் நீண்ட கால முதலீடாகக் கருதப்படுகிறது. இதில், நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது கொஞ்சம் பணத்தை தொடந்து டெபாசிட் செய்து வந்தால், அது உங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு சிறந்த பலன் கிடைக்கும். முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை இரண்டு வழிகளில் பெறுகிறார்கள். 

நீங்கள் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம், மீதமுள்ள தொகை வருடாந்திர ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்படும். ஆண்டுத்தொகையாக பெற எவ்வளவு தொகை அதில் எடுக்காமல் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதிகமான தொகை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

NPS கணக்குகளின் வகைகள்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் வகை கணக்கு NPS அடுக்கு 1 என்றும், இரண்டாவது வகை கணக்கு NPS அடுக்கு 2 என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் ஓய்வூதிய பலன்களைப் பெற விரும்பினால், அவருக்கு அடுக்கு-1 கணக்கை தொடங்க வேண்டும்

அடுக்கு 1 கணக்கு முக்கியமாக PF டெபாசிட் செய்யாதவர்களுக்கும், ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை விரும்புபவர்களுக்கும் ஆகும். இந்த வகை கணக்கு அதாவது NPS அடுக்கு 1 திட்டம் ஓய்வூதியத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஒரு கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ₹ 500 டெபாசிட் செய்யலாம்.

ஓய்வுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் 60% தொகையை எடுக்கலாம். மீதமுள்ள 40 சதவிகிதம் ஓய்வூதியம் பெறும் வகையில் முதலீடாக இருக்கும்.  இது மாதாந்திர ஓய்வூதிய வடிவத்தில் வழக்கமான வருமான ஆதாரத்தை உறுதி செய்கிறது.

NPS கணக்கைத் திறப்பதற்கான வழிமுறைகள்

- NPS அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

- பதிவு ஐகானைக் கிளிக் செய்யவும்.

- ஆதார் ஆப்ஷனுடன் பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

- OTP ஐ சரிபார்க்கவும்.

- பொருத்தமான அனைத்து விபரங்களை நிரப்பவும்.

- பணத்தை செலுத்தவும்.

பணம் செலுத்தும் செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் பெயரில் கணக்கு திறக்கப்படும்.

மேலும் படிக்க | விவசாயிகளே! ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இதை அப்டேட் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News